இந்தியா

நாள் ஒன்றுக்கு 19,000 முறை 'ஐ லவ் யூ Alexa' சொல்லும் இந்தியர்கள் : அமேசான் நிறுவனம் வெளியிட்ட தகவல்

அலெக்ஸா ஸ்பீக்கரிடம் நாள் ஒன்றுக்கு 19,000 முறை இந்தியர்கள் 'ஐ லவ் யூ அலெக்ஸா' என சொல்வதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 19,000 முறை 'ஐ லவ் யூ Alexa' சொல்லும் இந்தியர்கள் : அமேசான் நிறுவனம் வெளியிட்ட தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியில், நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகின் பல தகவல்களை அறிந்து வருகிறோம்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் இருந்தவர்களைக் கூட கொரோனா வைரஸ் இவர்களைத் தொழில்நுட்பத்தின் பக்கம் வரவைத்துவிட்டது. பள்ளி வகுப்பறைகள் இன்று மொபைல் வகுப்பறையாக மாறிவிட்டன.

இந்நிலையில், தொழில்நுட்பத்தில் புதிய, புதிய வளர்ச்சியைக் கண்டுபிடித்து வரும் அமேசான் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு Alexa எனும் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்தது. இந்த அலெக்ஸாவிடம் நாம் மனிதரிடம் பேசுவதை போல் பேசாலாம். நாம் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அலெக்ஸா பதில் சொல்லும் என்பதால் இது இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.

நாள் ஒன்றுக்கு 19,000 முறை 'ஐ லவ் யூ Alexa' சொல்லும் இந்தியர்கள் : அமேசான் நிறுவனம் வெளியிட்ட தகவல்

மேலும், தங்கள் வீடுகளில் இருக்கும் ஸ்மார்ட் விளக்குகள், விசிறிகள், ஏ.சிக்கள், கேமராக்கள், ஏர் பியூரிஃபையர்கள், டி.வி.களை ஆஃப், ஆன் செய்ய அலெக்சா ஸ்பீக்கரை பயன்படுத்த முடியும்.

இந்நிலையில், அமேசான் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு 19,000 முறை, ‘ஐ லவ் யூ அலெக்ஸா’ எனக் கூறுவதாகவும், இது 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் அலெக்ஸா ஸ்பீக்கரிடம் மக்கள் உரையாடல்கள் 67 சதவிகிதம் அதிகரித்துள்ளாகவும், நகரப் பகுதிகளைச் சேராத மக்களும் அலெக்ஸாவை பயன்படுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories