இந்தியா

“தமிழகத்தை சீர்குலைக்க முயலும் இந்துத்வா சக்திகள்; மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்”- என்.ராம் பேச்சு!

அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தை சீர்குலைக்க இந்துத்வா சக்திகள் பல்வேறு வகையில் முயற்சி மேற்கொள்வதால், தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இந்து என்.ராம் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தை சீர்குலைக்க முயலும் இந்துத்வா சக்திகள்; மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்”- என்.ராம் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசு அதிகாரத்தைக் கொண்டு இந்துத்வாவை தமிழகத்திற்குள் நுழைக்க பல தந்திரங்களைக் கையாளும் அவர்களின் முயற்சி தோல்வியடைய, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை என இந்து என்.ராம் உதகையில் நடைபெற்ற படுகர் சமுதாய மக்களின் காலண்டர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்களின் 300 ஆண்டு கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் நீலகிரி ஆவண காப்பகம் சார்பில் உதகையில் படுகர் சமுதாய மக்களின் காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா, இந்து குழும தலைவர் என்.ராம் ஆகியோர் கலந்துகொண்டு படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய காலண்டரை வெளியிட்டனர்.

“தமிழகத்தை சீர்குலைக்க முயலும் இந்துத்வா சக்திகள்; மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்”- என்.ராம் பேச்சு!

அப்போது பேசிய இந்து என்.ராம், “மத்திய அரசு அதிகாரத்தைக் கொண்டு, இந்துத்வாவை தமிழகத்திற்குள் நுழைக்க பல தந்திரங்களைக் மேற்கொண்டது. ஆனால், அவர்களின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

தமிழகத்தில் அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை. அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தை சீர்குலைக்க இந்துத்வா தீயசக்திகள் பல்வேறு வகையில் முயற்சி மேற்கொள்வதால், தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தங்களுக்கு என தனி பாராம்பரியம் கலாச்சாரத்துடன் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள், 300 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு சம உரிமை அளித்து வாழ்ந்து வந்ததாகவும், தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் படுகர் சமுதாய மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories