இந்தியா

“மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி - சரிவைச் சந்தித்த ஏற்றுமதி”: வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!

இந்தியாவில் 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதகால ஏற்றுமதி 15.8% குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி - சரிவைச் சந்தித்த ஏற்றுமதி”: வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடுமுழுவதும் ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரமும் படு மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்த பொருளாதார பிரச்னைகளைத் தீர்க்க மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், 2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில் ஏற்றுமதியைக் காட்டிலும், 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதகால ஏற்றுமதி 15.8% குறைந்துள்ளதாக ஆங்கில நாளில் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 238.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போது 200.55 புள்ளிகளாக சரிந்துள்ளது. அதேபோல், 2019 டிசம்பரில் மட்டும் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 27.11 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், அதுவும் 2020 டிசம்பரில் 26.89 பில்லியன் டாலர்களாக குறைந்து, 0.8 சதவிகித சரிவைச் சந்தித்துள்ளது.

“மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி - சரிவைச் சந்தித்த ஏற்றுமதி”: வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!

ஆனால், இதே காலத்தில் நாட்டின் இறக்குமதி அதிகரித்துள்ளது. 2020 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் இறக்குமதி 29.08 சதவிகிதம் குறைந்து 258.29 பில்லியன் டாலராக உள்ளது. இதுவே 2019-20 ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் 364.18 பில்லியன் டாலர்களாக இருந்தது.

ஒப்பீட்டளவில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் இறக்குமதி குறைந்திருந்தாலும், ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. இதனால், ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததால், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையும் 2020 டிசம்பரில் 25.78 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மேலும், கடந்தாண்டு 12.49 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தவர்த்தக பற்றாக்குறை, 2020 டிசம்பரில் 15.71 பில்லியன் டாலராகஉள்ளது. 2020 ஜூலை மாதத்துக்குப் பிறகு இந்தியா மிகப் பெரிய வர்த்தகப் பற்றாக்குறையை இப்போதுதான் சந்தித்துள்ளது என தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories