இந்தியா

“நாடு முழுவதும் சுகாதார, முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்” -ஹர்ஷ் வர்தன் தகவல்

தமிழகம், புதுவை உள்பட நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது.

“நாடு முழுவதும் சுகாதார, முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்” -ஹர்ஷ் வர்தன் தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் உள்ள 116 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி ஒத்திகை இன்று தொடங்கியது.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை தொடங்கி வைத்தார். மருத்துவர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய அமைச்சர், தடுப்பூசி போடுவதற்கான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் முதற்கட்டமாக 1 கோடி சுகாதார மற்றும் 2 கோடி முன்கள பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தெரிவித்தார்.

அதேபோல, கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை, இன்று சென்னை, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய, ஐந்து மாவட்டங்களில், 17 இடங்களில் தொடங்கியது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பு ஊசி ஒத்திகையை தொடங்கி வைத்தார். தமிழகத்தின் தலைநகரான சென்னையில்,ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் மருத்துவப் பணியாளர்கள், ஊடகவியாளர்கள் என 6 லட்சம் பேருக்கு நாள்தோறும் 100 பேர் வீதம் தடுப்பூசி போடப்படும். சுகாதார பணியாளர்கள் ஏற்கனவே 6 லட்சம் பேர் கொரோனா தடுப்பு ஊசிகள் பதிவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக முன் களப் பணியாளர்கள் அதனைத் தொடர்ந்து முதியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories