இந்தியா

“PM கேர்ஸ் நிதி பா.ஜ.க-வுக்கு மடைமாற்றப்பட்டதா?” : உண்மையை மறைக்கும் மோடி அரசு!

PM CARES நிதி தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குள் வராது என்றால் அவ்வளவு பணமும் எங்குதான் சென்றது?

“PM கேர்ஸ் நிதி பா.ஜ.க-வுக்கு மடைமாற்றப்பட்டதா?” : உண்மையை மறைக்கும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கொரானோ காலத்தில் ”இடர்படும் மக்களின் துயர் போக்க அனைவரும் PM CARE க்கு நிதி கொடுங்கள்” என பிரதமர் மோடி விளம்பரப்படுத்தினார்.

அதற்காக இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் நிதி வழங்கப்பட்டது. பல அரசு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் நிதியாக அளித்தன. பல பெரு நிறுவனங்கள் தங்களின் CSR (Corporate Social Responsibility) பணம் முழுவதையும் கொரோனோ நிதியாக PM CARE க்கு கொடுத்தனர்.

கோடிக்கணக்கான சாமானிய மக்களும் 500, 1,000, 10,000 என தங்களால் இயன்ற பணத்தை PM CARES க்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு மக்களிடமும், அரசாங்க ஊழியர்களிடமும், பெரும் நிறுவனங்களிடமும் இருந்து PM CARES க்காக பெறப்பட்ட தொகை அதிகாரப்பூர்வ தகவல் படி ரூ. 3,076 கோடி (31st Aug வரை கணக்கில் காட்டப்பட்டது மட்டும்) .

“PM கேர்ஸ் நிதி பா.ஜ.க-வுக்கு மடைமாற்றப்பட்டதா?” : உண்மையை மறைக்கும் மோடி அரசு!

கொரானோவில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக கொடுக்கப்பட்ட இவ்வளவு தொகை முறையாக பயன்படுத்தப்பட்டதா? என கடந்த மே மாதம் RTI ல் கேட்கப்பட்ட போது அந்த தகவல்களை கொடுக்க இயலாது என்றும் PM CARES என்பது ”PUBLIC AUTHORITY” அல்ல (பொது அதிகார அமைப்பல்ல) என சொல்லப்பட்டது.

ஆனால் Public Charitable Trust என்றுதான் PM CARES TRUST பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் RTI வாயிலாக கேட்கப்பட்டபோது அதற்கு "owned by, controlled by and established by the government of India" but does not come under the RTI or Right to Information law as it receives private funds”. அதாவது அரசுக்கு சொந்தமானது, அரசால் நிர்வகிக்கப்படுவது. ஆனால் தனியார் நிதி பெறுவதால் அது தொடர்பான தகவலை தர முடியாது என அன்று ”அரசிற்கு தொடர்பில்லை ” என்று சொன்னதற்கு முரணாக இன்று பதில் அளித்துள்ளது.

பொது நிறுவனங்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும், அரசு ஊழியர்களிடமிருந்தும், இராணுவம் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிடமிருந்தும் நிதி வசூல் செய்துவிட்டு அது பற்றி தகவல் கேட்கும்போது இது பொது அதிகாரத்திற்குள் வராது எவரும் அதன் நிதி பற்றி கேள்வி கேட்க முடியாது எனச் சொல்வது பகல் கொள்ளையே அன்றி வேறில்லை.

“PM கேர்ஸ் நிதி பா.ஜ.க-வுக்கு மடைமாற்றப்பட்டதா?” : உண்மையை மறைக்கும் மோடி அரசு!
DIGI TEAM 1

PM CARES TRUST ஆனது 27/03/2020 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மறுநாளே Ministry of Corporate Affairs பத்திரம் வெளியிடுகிறது. அதில் PM பெரு நிறுவனங்கள் அளிக்கும் CSR நிதியை PM CARES TRUST பெறுவதற்கு எந்த தடையுமில்லை என்று அறிவிக்கிறது. மார்ச் 31 வரை அதாவது அறக்கட்டளை துவங்கி நான்கு நாளில் மட்டும் 3,076 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ தகவலின் படி(* https://bit.ly/3aOW957 ).

மேலும் PM CARES TRUST ஆனது வருமான வரி வரம்பிற்குள் வராது, CAG என்று சொல்லப்படுகிற இந்திய தலைமை கணக்கு தணிக்கைக்கும் உட்பட்டதல்ல. சுருக்கமாகs சொல்ல வேண்டுமெனில் மக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்திற்கு யாரிடமும் கணக்கு காட்ட வேண்டியதில்லை.

மேலும், PM CAREs TRUST BOND ல் ஒரு சரத்து வருகிறது அதில் CHAIR PERSON அதாவது பிரதமர் மோடி நினைத்தால் அறக்கட்டளை துவங்கியதன் நோக்கத்தினையே மாற்றி அமைக்க முடியும். தற்போது PM CARES ன் நோக்கமாக அவசரகாலத்தில் மக்களுக்காக நிதியினை பயன்படுத்துதல் என்றிருக்கிறது. இதன் பேரில் தான் மக்கள் நிதி கொடுத்தனர். ஆனால் இந்த நோக்கத்தைக் கூட மாற்றிக்கொள்ளும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

“PM கேர்ஸ் நிதி பா.ஜ.க-வுக்கு மடைமாற்றப்பட்டதா?” : உண்மையை மறைக்கும் மோடி அரசு!
DIGI TEAM 1

பிரதமரே நேரடியாய் அனைவரும் PM CARES க்கு நிதி கொடுங்கள் என கேட்கும்போது அது இந்திய அரசு கேட்பதாக தான் அனைவரும் நம்பினர். விளம்பரங்களும் அவ்வாறுதான் செய்யப்பட்டன.

ஆனால் அப்படி பெறப்பட்ட நிதி எதற்கு செலவிடப்பட்டது என கேட்கும் போது மட்டும், அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குள் வராது என்றால் அவ்வளவு பணமும் வேறு எங்கு சென்றது என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது. பா.ஜ.கவின் கட்சி நிதிக்கு மடைமாற்றம் செய்யப்பட்டதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. ஆனால் மத்திய பா.ஜ.க அரசோ வழக்கம்போல் மெளனம் காக்கிறது.

மாதாமாதம் மன் கி பாத் என ரேடியோவில் வந்து பேசும் மோடி, மூவாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் எங்கே போனது என்ற மக்களின் கேள்விக்குப் பதில் அளிப்பாரா?

banner

Related Stories

Related Stories