இந்தியா

“கார்ப்பரேட்களுக்கு அனைத்திலும் பங்கு... விவசாயிகளுக்கு தடியடி கொடுமை” - மோடி அரசை விமர்சித்த பிரியங்கா!

விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு வீசியது, தண்ணீர் பீய்ச்சி அடித்தது குறித்து விமர்சித்துள்ளார் காங். தலைவர் பிரியங்கா காந்தி.

“கார்ப்பரேட்களுக்கு அனைத்திலும் பங்கு... விவசாயிகளுக்கு தடியடி கொடுமை” - மோடி அரசை விமர்சித்த பிரியங்கா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு வீசியது, தண்ணீர் பீய்ச்சி அடித்தது குறித்து விமர்சித்துள்ளார் காங். தலைவர் பிரியங்கா காந்தி.

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபிலிருந்து டெல்லி வரை விவசாயிகள் ஒன்றிணைந்து ‘டெல்லி சலோ’ எனும் பெயரில் பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

விவசாயிகளைக் கலைக்க முற்பட்ட காவல்துறையினர், விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். இருப்பினும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“கார்ப்பரேட்களுக்கு அனைத்திலும் பங்கு... விவசாயிகளுக்கு தடியடி கொடுமை” - மோடி அரசை விமர்சித்த பிரியங்கா!

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, "விவசாயிகளின் குரலைக் கேட்பதற்குப் பதிலாக கடும் குளிர் காலத்தில் விவசாயிகள் மீது தண்ணீரைப் பாய்ச்சுகிறது பா.ஜ.க அரசு.

விவசாயிகளிடமிருந்து அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டுள்ள பா.ஜ.க அரசு, கார்ப்பரேட்டுகளுக்கும் பெரும் நிறுவனங்களுக்கும் வங்கி, ரயில்வே, விமான சேவை என அனைத்திலும் பங்குகளை வாரி இறைக்கிறது” எனச் சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories