இந்தியா

மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் : போலிஸ் குவிப்பு!

மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் : போலிஸ் குவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் தொழிலாளர் நல சட்டங்களை நான்காம் தர சட்ட தொகுப்பாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டிலுள்ள துறைமுகங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு தழுவிய அளவில் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

அதேப்போல் தமிழகத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களை ஒடுக்க அ.தி.மு.க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக , தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கம் சார்பில், வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் : போலிஸ் குவிப்பு!

மேலும் ஒப்பந்த பணியாளர்களும் வேலைக்கு செல்லாத காரணத்தால், தூத்துக்குடி துறைமுகப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது இதன் காரணமாக பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய அரசு துறைமுகங்களை தனியார்மயமாக்கும் வகையில், கொண்டு உள்ள மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற்ற கூடாது என தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்று வருவதாகவும், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் துறைமுகங்கள் மட்டுமின்றி, துறைமுகங்களில் சார்ந்துள்ள பல நிலங்கள் தனியார் வசம் போகும் சூழ்நிலை உருவாகும்.

எனவே இந்த மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் துறைமுக அலுவலர்கள் ஊழியர்கள் லாரி ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் துறைமுகம் வாயில் முன்பாக போராட்டத்திலும் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர்.

banner

Related Stories

Related Stories