இந்தியா

“மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு” : பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சென்று போராட்டம் நடத்த தடை..!

பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க ஆளும் ஹரியானாவில் போலிஸார் தடைகளை ஏற்படுத்தி தடுத்துவருவதால் அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது.

“மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு” : பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சென்று போராட்டம் நடத்த தடை..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய மோடி அரசாங்கம் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இருப்பதாகவும், அந்த சட்டங்களை நிறைவேற்ற வேண்டாம் என பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பஞ்சாப் விவசாயிகளால் அம்மாநிலமே போராட்டக்களமாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது, பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கே களத்தில் இறங்கி போராடி வருகிறார்.

“மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு” : பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சென்று போராட்டம் நடத்த தடை..!

அங்கு விவசாயிகள் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும், பா.ஜ.க அரசிற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் தொழிலாளர்கள், விவசாய நலன்களுக்கு எதிராக தேசிய அளவில் இன்று 5 வது முறையாக வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறுகிறது.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில், பஞ்சாப், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் இன்றும் நாளையும் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். பஞ்சாப், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் டெல்லி செல்வதற்காக ஹரியான வழியாகத்தான் செல்ல வேண்டும்.

அதனால் போராட்டத்தை தடுக்கும் வகையில், ஹரியானவில் தற்போது பல இடங்களில் தடுக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு விவசாயிகள் முன்னேறினர். இதனால் போலிஸார் தண்ணீரை பீச்சி அடித்து அவர்களை தடுத்து வருகின்றனர்.

ஆனாலும் தடையை மீறி விவசாயிகள் சென்றாலும் அடுத்தடுத்த இடங்களில் தடுக்க அம்மாநில அரசு போலிஸாரை குவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க பல இடங்களை தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பல மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் டெல்லி சென்று போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

banner

Related Stories

Related Stories