இந்தியா

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற பரிந்துரை - தொழிலாளர் விரோத மோடி அரசின் அடுத்த திட்டம்!

பா.ஜ.க அரசு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வரும் நிலையில், மத்திய பா.ஜ.க அரசு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்ற மத்திய தொழிலாளர் நலத்துறை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், சூழல் மேம்பாடு குறித்த சட்டம் தொடர்பாக வரைவு ஆணை நேற்று வெளியாகியுள்ளது. இந்த வரைவு ஆணையில் இடம்பெற்றுள்ளவை குறித்து ஆட்சேபம் மற்றும் ஆலோசனைகளை வழங்க 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், தொழிலாளர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கலாம் என தொழிலாளர் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இது நாடு முழுவதுமுள்ள தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஏற்கனவே, பா.ஜ.க ஆளும் குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 8 மணிநேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories