இந்தியா

“ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் சிக்கல்; நாட்டு மக்களின் நம்பிக்கை சிதைகிறது” - மோடி அரசை சாடும் ராகுல்!

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை இந்த அளவுக்கு உச்சத்தில் இருந்ததேயில்லை என்று ராகுல் காந்தி மோடி அரசை விமர்சித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை இந்த அளவுக்கு உச்சத்தில் இருந்ததேயில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசை விமர்சித்துள்ளார்.

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவைச் சந்தித்திருப்பதோடு, வேலைவாய்ப்பின்மையும் வெகுவாக அதிகரித்துள்ளதால் இந்தியா பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

இதற்கிடையே லட்சுமி விலாஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்த வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., “நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை இந்த அளவுக்கு உச்சத்தில் இருந்ததில்லை. பணவீக்கமும் இதுபோன்று கட்டுக்கு அடங்காமல் இருந்தது இல்லை.

நாட்டு மக்களின் நம்பிக்கை அன்றாடம் சிதைந்து கொண்டிருக்கிறது. சமூக நீதி நசுக்கப்படுகிறது. வங்கிகள் பிரச்னையில் சிக்கியுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது. வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்ன நடக்கிறது என்று தெரியவில்லை'” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories