இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84 லட்சமாக உயர்வு - பலி 1.24 லட்சத்தை தாண்டியது ! #COVID19

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 47,638 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேப்போல், ஒரே நாளில் 670 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 47,638 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 84,11,724 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 670 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,24,985 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 54,157 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 77,65,966 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 5,20,773 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84 லட்சமாக உயர்வு - பலி 1.24 லட்சத்தை தாண்டியது ! #COVID19

அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 92.32% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.49% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 6.19% ஆக குறைந்துள்ளது.

கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories