Corona Virus

இதுவரை தமிழகத்தில் 1 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை... மொத்த பாதிப்பு 7,36,777 ஆக உயர்வு! #Covid19

இதுவரை 1 கோடியே 52 ஆயிரத்து 393 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,36,777 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 79,388 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1 கோடியே 52 ஆயிரத்து 393 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 621 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,03,085 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 238 பேருக்கும், திருவள்ளூரில் 148 பேருக்கும், சேலத்தில் 130 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா குணமடைந்து இன்று மட்டும் 2,413 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7,06,444 ஆக உள்ளது. தற்போது 19,061 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 28 பேர் உயிரிழந்தனர். அதில், 14 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 14 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,272 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories