இந்தியா

மருத்துவ இடஒதுக்கீடு: பாஜக அரசு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது - நாராயணசாமி பகீரங்க குற்றச்சாட்டு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தராமல், மாநில வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு தொடர்ந்து தடையாக உள்ளது என நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மருத்துவ இடஒதுக்கீடு: பாஜக அரசு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது - நாராயணசாமி பகீரங்க குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொஞ்சம் கொஞ்சமாக, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. இதன் மூலம் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க பாஜக முயற்சிக்கிறது என ஆதாரத்தோடு கூறியதற்கு இதுவரைஏன் பதில் அளிக்கவில்லை என முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தராமல், மாநில வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு தொடர்ந்து தடையாக உள்ளது. பாஜகவின் பலம், பலகீனம் புதுச்சேரி மக்களுக்கு நன்றாக தெரியும். பாஜக எங்கே என தேடும் நிலையில்தான் புதுச்சேரியில் உள்ளது. அவர்களுடன் கூட்டணி சேருபவர்களுக்கு புதுச்சேரி மக்கள் வரும் தேர்தலிலும் சரியானபாடம் புகட்டுவார்கள்.

மேலும் புதுச்சேரி அரசுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக, மத்திய அரசு சார்பாக, 798 கோடி ரூபாய் விரைவில் கிடைக்க உள்ளது. புதுச்சேரி சாலைகள், உப்பனாறு, திருக்காஞ்சி மேம்பாலங்கள், நான்கு வழி சாலைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு, 10500 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.

மருத்துவ இட ஒதுக்கீட்டில் மத்திய பாஜக அரசு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிக பெரிய துரோகத்தை செய்துள்ளது. புதுச்சேரி அரசு இதுபோன்ற இக்கட்டான நிலையில் கூட கொரானாவை கட்டுபடுத்தி வருகிறது. இது புரியாமல் அதிமுக போன்ற கட்சிகள் தேவையற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories