இந்தியா

மற்ற அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க:மெகபூபா முஃப்தி விடுதலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி விடுதலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

மற்ற அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க:மெகபூபா முஃப்தி விடுதலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு பிரிவை ரத்து செய்ததும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் நாடெங்கும் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முந்தைய நாளே, ஜம்மு காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் என அனைவரும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வெளியுலகத் தொடர்பு இல்லாமல், இணைய சேவை, தபால் சேவை என அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீராகி வருவதாக அரசு தரப்பில் கூறி வந்தாலும், ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை இன்றளவும் திரும்பியபாடில்லை.

மற்ற அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க:மெகபூபா முஃப்தி விடுதலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

இந்நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, முதலில் சிறையிலும் பின்னர் வீட்டு காவலிலும் வைக்கப்பட்ட பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், மெகபூபா மட்டும் தொடர்ந்து வீட்டு காவலில் இருந்தார். இதற்கிடையே, மெகபூபாவை இன்னும் எத்தனை காலம் சிறை வைக்க இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 2 வாரங்களுக்குள் காஷ்மீர் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், மெகபூபா, 14 மாதங்களுக்கு பிறகு, நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டார். காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோகித் கன்சால் இதனை அறிவித்தார். மெகபூபா விடுதலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

“திருமதி. மெகபூபா முப்தி அவர்கள் 14 மாதத் தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். மற்ற அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் காலகட்டத்தில் தடைப்பட்ட அனைத்து ஜனநாயக நடைமுறைகளும் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தன் விடுவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மெகபூபா முஃப்தி நன்றி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories