இந்தியா

3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு - பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் உ.பி அரசால் தொடரும் குற்றங்கள்!

உத்தர பிரதேசத்தில் மர்ம நபர்கள் சிலர் 3 தலித் சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு - பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் உ.பி அரசால் தொடரும் குற்றங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக அதிகரித்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸில் 19 வயது தலித் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வல்லுறவு செய்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

உத்தர பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் மூன்று தலித் சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17, 10, மற்றும் 8 வயது கொண்ட மூன்று சிறுமிகள் தங்கள் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நுழைந்து ஆசிட் வீசி சென்றுள்ளனர்.

காயமடைந்த மூன்று சகோதரிகளும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் மீது ஆசிட் வீசிய நபர்களை காவல்துறையினர் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை கூறுகையில், “எனது மூத்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருந்தது. அவருக்க்கு அதிகமான காயம் ஏற்பட்டுள்ளது. இப்போது திருமணம் நடைபெறுவதே கேள்விக்குறி ஆகியுள்ளது” என வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியறிந்து அதிர்ந்த காங். தலைவர் பிரியங்கா காந்தி, “பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களை பாதுகாக்கும் உ.பி. அரசின் செயல் மாநிலம் முழுவதும் குற்றவாளிகளைத் தூண்டியுள்ளது” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories