இந்தியா

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உ.பி-யில் அதிகரிப்பு - பெண்ணின் தலையை வெட்டி வீதியில் வலம் வந்த இளைஞன் !

உத்தர பிரதேசத்தில் மனைவியின் தலையை வெட்டி கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உ.பி-யில் அதிகரிப்பு - பெண்ணின் தலையை வெட்டி வீதியில் வலம் வந்த இளைஞன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுமிகள், இளம்பெண்கள் குண்டர்கள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இச்சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மற்றும் பல்ராம்பூரில் கும்பல் பாலியல் பலாத்காரத்தால் 2 பெண்கள் கொல்லப்பட்டனர். இதனிடையே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உ.பி.யில்தான் அதிகம் என தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் மனைவியின் தலையை வெட்டி கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கின்னர் யாதவ். இவர் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போடுவதாக கூறப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உ.பி-யில் அதிகரிப்பு - பெண்ணின் தலையை வெட்டி வீதியில் வலம் வந்த இளைஞன் !

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று கின்னர் யாதவ் நடைபயிற்சி முடித்துவிட்டு, வீடு திரும்பும்போது, அவரது மனைவி விமலா அருகில் உள்ள ரவிகாந்த் என்பரிடம் பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த கின்னர் யாதவ், ரவிகாந்தைத் தாக்கியுள்ளார்.

இதனால், இருவருக்கு இடையே பெரியளவில், சண்டை மூண்டுள்ளது. அப்போது, விமலா சண்டையை தடுக்க வந்துபோது ஆத்திரத்தில், வீட்டில் இருந்த கோடரியை எடுத்து விமலாவின் தலையை வெட்டியுள்ளார்.

பின்னர், வெட்டிய தலையுடன் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு நடந்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த காவலர்கள் தலையுடன் நடந்து வந்த கின்னர் யாதவை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories