இந்தியா

பல இந்தியர்கள் தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை மனிதர்களாக கருதுவதில்லை-ராகுல்காந்தி ட்வீட்!

ஹத்ராஸ் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உ.பி. அரசை சாடல்.

பல இந்தியர்கள் தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை மனிதர்களாக கருதுவதில்லை-ராகுல்காந்தி ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி, தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. மேலும் இந்தச் சம்பவம் நடைபெற்ற அடுத்த சில தினங்களுக்குள் அதே மாநிலத்தில் பலராம்பூா் என்ற மற்றொரு மாவடத்தில் ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொள்ளப்பட்டார்.

இதனையடுத்துக் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக வன்கொடுமை தொடர்ச்சியாக நடந்து வருவதையே காட்டுகிறது. இந்த மாதிரியான தொடர் சம்பவங்கள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியதாவது ”பெரும்பாலான இந்தியர்கள் தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியின மக்களை மனிதர்களாகவே கருதுவதில்லை” எனச் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உ.பி. அரசைச் சாடியுள்ளார்.

வெட்கப்பட வேண்டிய உண்மை என்னவென்றால் தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரைப் பல இந்திய மக்கள் மனிதர்களாக ஏற்றுக் கொள்ளாதற்கு உதாரணம் இந்த ஹாத்ரஸ் பெண்ணையும் அவர்கள் ஒரு சக மனிதராக பார்க்கவில்லை என்பதுதான். மேலும் அந்த மாநில முதல்வரும், காவல்துறையினரும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்' என ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories