இந்தியா

“ஜனநாயகத்திலிருந்து கருத்து வேறுபாட்டை பிரிக்க முடியாது” : CAA-வுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் கருத்து!

குடியுரிமை சட்டத்துக்கான சட்ட அங்கீகாரம் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

“ஜனநாயகத்திலிருந்து கருத்து வேறுபாட்டை பிரிக்க முடியாது” : CAA-வுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லியில் 101 நாட்களாக நடந்த ஷாஹின்பாக் போராட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான 3 நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர்.

அப்போது, போராட்டங்கள் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதே நேரத்தில் பல நாட்களாக சாலையை தொடர்ந்து ஆக்கிரமித்து போராட்டம் நடத்தியதை ஏற்க முடியாது. போராட்டத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும் தீர்ப்பில், “அரசியல் சாசனம் என்பது சட்டம் இயற்றுவது, நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றை ஒருங்கே கொண்டது. நாடாளுமன்றம் குடியுரிமை சட்டத்தை இயற்றியுள்ளது. ஆனால் அதற்கான நீதித்துறையின் சட்ட அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை.

“ஜனநாயகத்திலிருந்து கருத்து வேறுபாட்டை பிரிக்க முடியாது” : CAA-வுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் கருத்து!

வழக்கு நிலுவையில் உள்ளது. ஜனநாயகத்திலிருந்து கருத்து வேறுபாட்டை பிரிக்க முடியாது. இரண்டும் ஒன்றோடுஒன்று கைகோர்த்துச் செல்பவை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். ஜனநாயகத்திலிருந்து கருத்து வேறுபாட்டை பிரிக்க முடியாது. இரண்டும் ஒன்றோடுஒன்று கைகோர்த்துச் செல்பவை” என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories