இந்தியா

இந்தியன் வங்கி ஏ.டி.எம் ரசீதில் இந்தி திணிப்பு - தமிழகத்தின் மீது மொழிரீதியாக தொடர் தாக்குதல்!?

உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் இந்தியன் வங்கி ஏ.டி.எம் ரசீதில் ஆங்கிலம் இந்தி மொழி இடம்பெற்றிருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியன் வங்கி ஏ.டி.எம் ரசீதில் இந்தி திணிப்பு - தமிழகத்தின் மீது மொழிரீதியாக தொடர் தாக்குதல்!?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் வேலையில் மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்படுவதை உறுதிசெய்யும் வகையில் நாள்தோறும் இந்தி திணிப்பு தொடர்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன.

சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியில் இந்தி தெரியாததால் கடன் மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தற்போது உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் இந்தியன் வங்கி ஏ.டி.எம் ரசீதில் ஆங்கிலம் இந்தி மொழி இடம்பெற்றிருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் திருநாவலூர், கெடிலம், சேந்தமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்தியன் வங்கி ஏ.டி.எம் ரசீதில் இந்தி திணிப்பு - தமிழகத்தின் மீது மொழிரீதியாக தொடர் தாக்குதல்!?

இந்த வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் இருந்து நேற்று வந்த ரசீதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பதிவுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பரவலாக இந்தியை திணிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.வெங்கடேசன் கூறும்போது, “இந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக கிராமப்புற ஏழை எளிய மக்கள்தான் உள்ளனர். இந்த வங்கி ஏ.டி.எம்மில் கடந்த இரண்டு நாள்களாக வரும் ரசீதுகளில் தமிழ் எழுத்து இல்லை. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள்தான் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என சட்டமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ஆனால் தற்போது ஏ.டி.எம் மையத்தில் வரும் ரசீதில் கூட தமிழ் எழுத்து இல்லை. இதில் தொடர்புடைய வங்கி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories