இந்தியா

இதுதான் மோடியின் தமிழ்ப்பற்றா? : குஜராத் தமிழ்ப் பள்ளியை மூட பா.ஜ.க அரசு முடிவு - பெற்றோர்கள் போராட்டம்!

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் செயல்பட்டு வந்த தமிழ் பள்ளி மூடப்படுவதை தடுக்க முடியவில்லையா என தமிழர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளி கடந்த 81 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணமாச்சார்ய பண்டிட் என்பவர் தமிழ் மக்களின் கல்விக்குப் பயன்படும் வகையில் இந்தப் பள்ளியை நிறுவினார்.

இந்நிலையில் இந்தப் பள்ளியில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறி பள்ளியை மூட பள்ளி நிர்வாகமும் மாவட்டக் கல்வி நிர்வாகமும் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

தாய்மொழிக் கல்வியை முடக்கி இந்தியை திணிக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் திட்டமாகவே இந்த பள்ளியை மூடும் நிகழ்வு அமைந்துள்ளதாக குஜராத் வாழ் தமிழர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.

இதுதான் மோடியின் தமிழ்ப்பற்றா? : குஜராத் தமிழ்ப் பள்ளியை மூட பா.ஜ.க அரசு முடிவு - பெற்றோர்கள் போராட்டம்!

பள்ளியை மூடினால் கல்வி பாதிக்கப்படும் என்றும் தமிழ் மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளியை மூடக்கூடாது என்றும் மாவட்ட கல்வி அலுவலர் முதல் மாநில கல்வி அமைச்சர் வரை கோரிக்கை வைத்துள்ளனர்.

குஜராத் வாழ் தமிழர்களின் கோரிக்கையை குஜராத் மாநில அரசும் அதிகாரிகளும் ஏற்பதாகத் தெரியவில்லை. இதனால் மாணவர்களின் பெற்றோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதான் மோடியின் தமிழ்ப்பற்றா? : குஜராத் தமிழ்ப் பள்ளியை மூட பா.ஜ.க அரசு முடிவு - பெற்றோர்கள் போராட்டம்!

தமிழகத்திற்கு வரும்போதும், பல்வேறு இடங்களிலும் தமிழின் பெருமைகளைப் பேசுகிறார் பிரதமர் மோடி. அதை இங்குள்ள பா.ஜ.க ஆதரவாளர்களும் பெருமையாகப் பேசியும் பரப்பியும் வருகின்றனர்.

ஆனால், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் செயல்பட்டு வந்த தமிழ் பள்ளி மூடப்படுவதை தடுக்க முடியவில்லையா என்றும் இதுதான் மோடியின் தமிழ்ப்பற்றா என்றும் தமிழர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories