இந்தியா

30 வருடங்களாக ஒற்றை ஆளாக வாய்க்கால் வெட்டி கிராமத்துக்கே தண்ணீர் கொண்டுவந்துள்ள முதியவர்!

பீகாரில் கயா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு அரசாங்கத்தால் செய்யவேண்டிய பணியை தனி ஒரு ஆளாக ஒரு முதியவர் செய்துள்ளார்.

30 வருடங்களாக ஒற்றை ஆளாக வாய்க்கால் வெட்டி கிராமத்துக்கே தண்ணீர் கொண்டுவந்துள்ள முதியவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகாரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன்னுடைய கிராமத்துக் கண்மாய்க்குத் தண்ணீர் கொண்டுவருவதற்காகக் கடந்த 30 வருடங்களாக 3 கிலோமீட்டர் நீளம் உள்ள வாய்க்கால் ஒன்றை வெட்டி உருவாக்கியுள்ளார்.

பீகாரின் கயாவில் உள்ள லத்துவா என்ற பகுதியில் உள கொதிலவா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லவுங்கி புயான். இவர் ஒரு விவசாயி. கொதிலவா கிராமத்தில் உள்ள வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது என்பது மிகவும் சிரமமான காரியமாக இருந்து வந்துள்ளது.

பல வழிகளில் தண்ணீர் பாய்ச்ச முயற்சி செய்தாலும், பணமும் விரயமாகிக் கொண்டிருந்தது. கிராமத்தில் இருக்கும் குளத்திலும் தண்ணீர் குறைவாகவே இருந்தது. இதனால் புயானுக்கு ஒரு யோசனை தோன்றியது. கொதிலவா கிராமம் காடுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டது.

மழைக்காலங்களில் மலைகளிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் வீணாவதைப் பார்த்த அந்த தண்ணீரை தன் கிராமத்தின் குளத்துக்குக் கொண்டுவரவேண்டும் என முடிவு செய்தார். இதனால் வாய்க்கால் ஒன்றை வெட்டலாம் என அவர் முடிவு செய்தார்.

ஆனால் அவரின் இந்த யோசனைக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. இதனால் அவரே அந்த வேலையைத் தனியாளாகச் செய்யத்தொடங்கினார். தினந்தோறும் தன் கால்நடைகளை மேய்ச்சலுக்காகக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வாய்க்கால் வெட்டும் பணியை மேற்கொண்டுள்ளார்.

அப்படிக் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து அவர் செய்த பணி இன்று அந்த கிராமத்துக்கே தண்ணீர் கொண்டுவரும் 3 கி.மீ வாய்க்காலாக மாறி நிற்கிறது.

banner

Related Stories

Related Stories