இந்தியா

“பா.ஜ.க இதை செய்யாவிடில், என்னைப் பாதுகாக்கவில்லை என்று அர்த்தம்” : வெளியேறப்போவதாக மிரட்டும் சு.சுவாமி!

தனக்கு எதிராக பா.ஜ.க ஐ.டி விங் செயல்படுவதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டிள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

பா.ஜ.க மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, தான் ஒரு பொருளாதார பேராசிரியராக இருந்தும் தனக்கு மோடி அரசு சரியான அங்கீகாரம் வழங்கவில்லை என நீண்டகாலமாகவே தனது ஆதங்கத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார்.

தொடர்ந்து சரச்சைக்குரிய வகையில், குறிப்பாக பா.ஜ.க-வின் நிலைப்பாட்டிற்கு எதிரான வகையில் பேசி வரும் சுப்பிரமணியன் சுவாமி, மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை வறுத்தெடுத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது, தனக்கு எதிராக பா.ஜ.க ஐ.டி விங் செயல்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டை சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பா.ஜ.கவின் ஐ.டி விங், மோசமான முறையில் நடந்துகொண்டுவருகிறது. குறிப்பாக பல போலி கணக்குகள் மூலம் எனக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதலை தொடுக்கிறது. என்னை பின்பற்றுவர்கள் கடுமையான எதிர்வினையை செய்தால் அதற்கு நான் பொறுப்பில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “பா.ஜ.க ஐ.டி விங் தலைவர் அமித் மாளவியாவை நாளைக்குள் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கவில்லையென்றால் பா.ஜ.க என்னைப் பாதுகாக்கவில்லை என்று அர்த்தம்” என தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.கவில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி விரைவில் வெளியேறப்போகிறார் என்று அரசியல் வட்டாராத்தில் கூறுகின்றனர்.

banner

Related Stories

Related Stories