இந்தியா

#ஹிந்தி_தெரியாது_போடா : இந்தி திணிப்புக்கு எதிராக ட்விட்டரில் தெறிக்கும் மீம்ஸ்!

பா.ஜ.க அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் இன்று இந்திய அளவில் ட்ரெண்டானது. பலரும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தொடர்பான மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் இன்று இந்திய அளவில் ட்ரெண்டானது. பலரும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தொடர்பான மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில், டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற தி.மு.க எம்.பி கனிமொழியை, இந்தி தெரியாததால், "நீங்கள் இந்தியரா?" என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான இணையவழிப் பயிற்சி முகாமில், இந்தியில் மட்டும் பயிற்சியை நடத்தியதாகவும், இந்தி தெரியாவிட்டால் வெளியேறலாம் என்று அதிகாரி கூறியதாகவும் தமிழக மருத்துவர்கள் குற்றம்சாட்டியது பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது.

இயக்குநர் வெற்றிமாறன், இந்தி தெரியாததால் தான் கடுமையாக அவமதிக்கப்பட்டதாக சமீபத்தில் தெரிவித்தது பெரும் விவாதங்களைக் கிளப்பியது.

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ‘மெட்ரோ’ ஷிரிஷ் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை யுவன் வெளியிட்டிருந்தார். அதில் யுவன் சங்கர் ராஜா நான் தமிழ் பேசும் இந்தியன் என்று அச்சிடப்பட்ட்டிருந்த டி-சர்ட் அணிந்திருந்தார். ஷிரிஷ் ‘இந்தி தெரியாது போடா’ என்று எழுதப்பட்ட டி-சர்ட்டை அணிந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், பலரும் இதுதொடர்பான மீம்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில இங்கே...

banner

Related Stories

Related Stories