இந்தியா

“கருகும் பிஞ்சுகள்... இருளும் எதிர்காலம்”: உயிர் பறிக்கும் ஆன்லைன் வகுப்புகள் - எப்போது பேசப்போகிறீர்கள்?

தொலைக்காட்சிகளிலும் ஆன்லைன் வகுப்புக்களை எடுக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

“கருகும் பிஞ்சுகள்... இருளும் எதிர்காலம்”: உயிர் பறிக்கும் ஆன்லைன் வகுப்புகள் - எப்போது பேசப்போகிறீர்கள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்திய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் திணறி வருகிறார்.

இதனால், அமெரிக்காவின் பல மாகாணங்களில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அமெரிக்காவில் பெரும்பாலோனர் வீடுகளில் இணைய வசதிகள் இருந்தும் அங்கிருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்க முடியாத நிலை உள்ளது.

இந்த சூழலில், வல்லரசு என சொல்லும் அமெரிக்கா நாட்டின் நிலைமையே இவ்வாறு இருக்க, வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா உள்ள போது, மோடி அரசு அமெரிக்கா செய்யாததைக் கூட இங்கு நேர் எதிர்மாறாக செய்து வருகிறது. இதனால் கடும் பாதிப்புகளையும் இந்தியா சந்தித்து வருகிறது.

“கருகும் பிஞ்சுகள்... இருளும் எதிர்காலம்”: உயிர் பறிக்கும் ஆன்லைன் வகுப்புகள் - எப்போது பேசப்போகிறீர்கள்?

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, கொரோனாவைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. சரி, பொருளாதாரப் பாதிப்பில் இருந்தாவது இந்தியா மீண்டுள்ளதா? என்றால் அதுவும் இல்லை. இதில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பாகவே, ஊரடங்கில் பல தளர்வுகளை கொண்டுவந்தது மட்டுமல்லாமல், மாணவர்களையும் காட்டாயமாக ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வைத்துள்ளது இந்த அரசு.

மத்திய அரசு, “பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்கள் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடந்தாலாம்” என அறிவித்த உடனே, அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்ப சூழல் என எதையுமே கணக்கில் கொள்ளாமல், ஆன்லைன் வகுப்பிற்கு தாவி கட்டணக் கொள்ளையிலும் ஈடுபடத் துவங்கியுள்ளது.

குறிப்பாக, இந்தியா முழுவதும், பெரும்பாலான தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணைய வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன. அதே போல கலைக் கல்லூரிகள், தொழிற் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், ஆன்லைன் கல்வி முறையைப் பின்பற்ற தொடங்கியுள்ளன.

“கருகும் பிஞ்சுகள்... இருளும் எதிர்காலம்”: உயிர் பறிக்கும் ஆன்லைன் வகுப்புகள் - எப்போது பேசப்போகிறீர்கள்?

இதில், மழலையர் பள்ளி தொடங்கி, பள்ளிக் கல்வி இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முறையில், பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். மேலும், “ஆன்லைன் கல்வி ஆபத்தானது என்றும், அது மாணவர்களுக்கிடையே பாகுபாட்டினை வளர்க்கும், ஆன்லைன் வழிக்கல்வி வகுப்பறை கல்விக்கு மாற்றானது அல்ல” என கல்வியாளர்கள் எவ்வளவோ குரல் கொடுத்தும் மத்திய - மாநில அரசுகள் தங்கள் செவிகளில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.

இதனால், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பற்ற, ஏழை - எளிய குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, ஆன்லைன் வகுப்புக்கு தேவையான மொபைல், இணைய வசதி மற்றும் தொலைக்காட்சி போன்ற எந்த வசதிகளும் இல்லாத ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது அரிதான ஒன்றாக மாறிப்போயுள்ளது.

உண்மை நிலை என்ன?

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் கிராமப்புறங்களில் 4.4 விழுக்காடு வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 23.4 விழுக்காடு வீடுகளிலும் மட்டுமே கணினிகள் உள்ளன. அதேபோன்று கிராமப்புறங்களில் 14.9 விழுக்காடு வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 42 விழுக்காடு வீடுகளில் மட்டுமே இணையதள (Internet) வசதிகள் உள்ளன.

“கருகும் பிஞ்சுகள்... இருளும் எதிர்காலம்”: உயிர் பறிக்கும் ஆன்லைன் வகுப்புகள் - எப்போது பேசப்போகிறீர்கள்?

மேலும் இது இல்லாமல், ஸ்மார்ட் போன் 24 விழுக்காடும், 11 விழுக்காடு வீடுகளில்தான் கணினி, மடிக் கணினி, நோட்புக், நெட்புக் போன்றவை இருப்பதாக என்.எஸ்.எஸ்.ஓ ஆய்வு அறிக்கை 2017-18 தெரிவிக்கிறது.

அதேப்போல், ‘ஸ்மைல் பவுண்டேஷன்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்திய ஆய்வில், 56 விழுக்காடு பள்ளி மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால், எந்த முறையிலும் ‘ஆன்லைன்’ வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனால் செல்போன் இல்லாத மாணவர்கள் கல்வி பெற முடியாத வருத்தத்தில் மனமுடைந்து பலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக, ஆன்லைன் வகுப்பால் தமிழகத்தில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

“கருகும் பிஞ்சுகள்... இருளும் எதிர்காலம்”: உயிர் பறிக்கும் ஆன்லைன் வகுப்புகள் - எப்போது பேசப்போகிறீர்கள்?

இந்நிலையில், - தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஆன்லைன் வழி கற்பித்தலுக்கான உள்கட்டமைப்புகளைப் பெற்று இருக்கின்றதா?

இணைய வழி கற்பித்தலுக்கு மின் வசதி, இணையத்தளத் தொடர்பு, கணினி, ஸ்மார்ட் போன் போன்ற வசதிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்திருக்கின்றதா?, ஒரே குடும்பத்தில் இரண்டு, மூன்று குழந்தைதள் இருப்பவர்களுக்கு தனித்தனியே அனைத்து வசதிகளுக்கும் உள்ளதா? என்பதையும் பார்க்க வேண்டும்.

எனவே, தற்போது நெருக்கடியான காலகட்டத்தில் நாடு உள்ளபோது, செயற்கைகோள் மூலம் கல்விக்கான சேனல்களை இதற்குப் பயன்படுத்தி தனியார் தொலைக்காட்சிகளிலும் ஆன்லைன் வகுப்புக்களை எடுக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories