கொரோனா கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்கூடங்கள் அனைதும் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் ஏறத்தாழ இரண்டு மாத காலமாக ஆன்லைனில் வகுப்பு நடத்தி வருகின்றன.
அப்படி ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் , பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது 15 வயது மகன் விக்னேஷ். ஆன் - லைனில் படிக்க செல்போன் வாங்கி தர சொல்லி தன் தந்தையிடம் பலமுறை கேட்டுள்ளார்.
விவசாயியான தந்தை விஜயகுமார் தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும், முந்திரிக் காய்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் செல்போன் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் கடந்த இரண்டு மாதமாக தன்னால் ஆன்லைனில் படிக்க முடியவில்லை என மனமுடைந்த விக்னேஷ் தாயின் சேலையில் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவனின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைனில் படிக்க செல்போன் இல்லாததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
தமிழக அரசு இதுபோன்ற தனியார்ப் பள்ளிகளை கண்காணித்து ஆன்லைன் வகுப்புகளை இன்னும் முறைபடுத்தமல் இருப்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.