இந்தியா

CAA எதிர்ப்பு போராட்டம்: கோரக்பூர் டாக்டர், ஜேஎன்யூ மாணவிக்கு ஐகோர்ட் ஜாமின் - NSA வழக்கை ரத்து செய்ய ஆணை

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானுக்கு ஜாமின் வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம் அவர் மீதான வழக்குகளை ரத்து

CAA எதிர்ப்பு போராட்டம்: கோரக்பூர் டாக்டர், ஜேஎன்யூ மாணவிக்கு ஐகோர்ட் ஜாமின் - NSA வழக்கை ரத்து செய்ய ஆணை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தாக்கத்துக்கு இடையிலும் மத்திய பாஜக அரசு தன்னுடைய இந்துத்வ வெறியை கட்டவிழ்த்து விட்டபடியே செயல்பட்டு வந்திருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி மக்கள் நலனுக்காக குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நெருக்கும் பணியில் ஈடுபட்டது.

அதன்படி, வடகிழக்கு டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு விதைத் தூவியதாகக் குற்றஞ்சாட்டி கடந்த மே மாதம் 23ம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகள் இருவரை வீடு புகுந்து கைது செய்தது டெல்லி காவல்துறை.

பிஞ்ச்ரா டோட் என்றக் குழுவைச் சேர்ந்த தேவங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால் ஆகிய இரு மாணவிகளை கைது செய்த டெல்லி போலிஸ், சட்டப்பிரிவுகள் 186 மற்றும் 353ன் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

தேவாங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால்
தேவாங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால்

சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை கலவரமாக்கிய பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா மற்றும் மத்திய இணையமைச்சருக்கு பதில் ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது மோடி அரசு அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது சட்டவிரோதமானது என பலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கலிதாவும், நடாஷாவும் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஜூன் மாத வாக்கில், ஜாமின் கோரி தாக்கல் செய்த தேவாங்கனா கலிதாவின் மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது.

அதன் பிறகு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கையித் முன்னிலையில் ஜாமின் மனு விசாணைக்கு வந்தபோது, தனக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த ஒரு ஆதராமும் இல்லை என கலிதா தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களை கேட்டப்பிறகு தேவாங்கனா கலிதாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது.

இதேப்போன்று கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதாக கோரக்பூர் குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதனையடுத்து, ஜனவரி 30ம் தேதியன்று சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை சென்றிருந்த மருத்துவ கஃபீல் கானை விமான நிலையத்தில் வைத்து உத்தர பிரதேச சிறப்பு பணிக்குழு கைது செய்து மதுராவில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தது. கஃபீல் கான் மீது மத ரீதியில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாகக் கூறி சட்டப்பிரிவு 153ஏ கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கஃபீல் கானை கைது செய்தது சட்டவிரோதமானது எனக் கூறி அவரது மனைவி தொடர்ந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கஃபீல் கான் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டதுடன் அவருக்கு ஜாமின் வழங்கியது.

முன்னதாக, 2017ம் ஆண்டு கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 60க்கும் மேலான குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசின் அலட்சியத்தை மருத்துவர் கஃபீல் கான் மீது திசைத்திருப்பியதோடு அவரை பணியிடை நீக்கம் செய்து கைது செய்து பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

banner

Related Stories

Related Stories