இந்தியா

“டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!

டெல்லியில் நடந்த கலவரத்தின்போது, வன்முறையாளர்களுக்கு ஆதரவாக டெல்லி காவல்துறை நடத்திய மனித உரிமை மீறல்களை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தற்போது வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

“டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், கோகுல்புரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தபோது, பிப்ரவரி 24ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியது.

இந்த வன்முறை சுமார் 32 மணிநேரத்துக்கு நீடித்தது. இதனால் இதுவரை 53 பேர் பலியாகியும், நூற்றுக்கும் மேலானோர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளனர். மேலும், இந்துத்வ கும்பலால் வடகிழக்கு டெல்லியின் பெரும் பகுதி சூறையாடப்பட்டதால் இதுகாறும் நகரம் முழுவதும் மயானம் போன்றே காட்சியளிக்கிறது.

இந்நிலையில், டெல்லியில் நடந்த அந்த கலவர சம்பவங்களில், வன்முறையாளர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை நடத்திய மனித உரிமை மீறல்களை, உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கவனத்தில் கொண்டு செயல்படும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) தற்போது வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

“டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!
Manish Swarup

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அம்னெஸ்டி இன்டர்நேஷனல். அந்த அறிக்கையை, கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட 50 பேரிடம் பேசி, அவர்களுக்கு நேர்ந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து தயாரித்துள்ளது.

மேலும், நேரில் பார்த்த சாட்சிகளாக, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை தரவு, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஓய்வு பெற்ற காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் காணொளிகளை அடிப்படையாக வைத்து முழு தகவல்கள் அடங்கிய அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

அந்த அறிக்கையில், வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்கள் தொடர்பான சுயாதீன விசாரணையை முழுமையாக வெளியிட்டுள்ளது. அதில், டெல்லி காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டை ஆதாரத்துடன் முன்வைத்துள்ளது.

“டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!

குறிப்பாக, டெல்லி காவல்துறையினர் கலவரத்தை திட்டமிட்டு தடுக்கத் தவறியதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்லும்போது சிகிச்சைக்கு செல்லவிடாமல் தடுத்ததாகவும், அதுவும் இஸ்லாமியர்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர்.

மேலும், கலவரம் முடிந்து 6 மாதங்கள் ஆன பிறகும் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவதும், அமைதி வழியில் போடியவர்களை சிறையில் வைப்பது அவர்கள் பிணையில் வரமுடியாதபடி வழக்குகளைப் பதிவு செய்வது என டெல்லி காவல்துறை அராஜகம் செய்வதாக அதில் கூறியுள்ளனர்.

இவ்வளவு படுபாதக செயலில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையினர் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு கூட பதியவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

“டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!

மேலும், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போடிய மாணவர்கள் மீது டெல்லி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

(இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்தக் கோரிய பொது நல மனுக்களை டெல்லி காவல்துறை ஆமோதித்தது குறிப்பிடத்தக்கது)

அதேபோல், இந்தாண்டு ஜனவரி 5ம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது டெல்லி காவல்துறை இரும்புத்தடிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், இருபதுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததை அந்த அறிக்கை விவரிக்கிறது.

“டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!

மேலும் இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 40-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்தும் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்யவில்லை; அதற்கு மாறாக தாக்குதலில் காயமடைந்த ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் ஆயிஷி கோஷ் உள்ளிட்ட இடதுசாரி மாணவர்கள் மீதும் சிஏஏ எதிர்ப்புக்குழுவினர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்படுகிறது.

அதேவேளையில், டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார மற்றும் தேர்தல் கூட்டணியில் ஒரு சமூக மக்களை இழிவுபடுத்தும் நோக்கிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பேசிய பா.ஜ.க தலைவர்கள் பற்றியும் அறிக்கை விவரிக்கிறது.

“டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!

அதில், பிப்ரவரி மாதம் 26ம் தேதியன்று பா.ஜ.க தலைவர்கள் மற்றும் எம்.பி-க்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டும் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்யாததை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதனைத் தொடர்ந்து டெல்லி கலவரத்தின்போது, அவரசத்தேவைக்காக வழக்கப்பட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ பாதிக்கப்பட்டோர் தொடர்புகொண்டபோது, எவறும் மறுமுனையில் அழைப்பை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் பலர் கூறியதை அறிக்கை பதிவு செய்துள்ளது.

அதேபோல், டெல்லி போலிஸார் ஷூ காலணிகளால் தாக்கியதில் காயமடைந்து, 36 மணி நேரம் காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தனது மகன் உயிரிழந்தார் என்ற ஒரு தாயாரின் கதறலை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மேற்கொள் காட்டியுள்ளது.

“டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!

அந்தப் பேட்டியில், தனது மகனை சட்டப்படி 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜார்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை மேலும், தடுத்து வைக்கப்பட்டதற்கான ஆவணத்தை கூட கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட நவாப் அலி, “டெல்லி காவல்துறையை தொடர்புகொண்டு பேசியதில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. வன்முறையாளர்கள் எல்லாவித ஆயுதங்களையும் வைத்திருந்தார்கள்; உயிர்பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து தப்பினோம்.

எங்களுடன் இருந்தவர்கள் காயம்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது கலவரக்காரர்கள் கல்வீசித் தாக்கினார்கள். அங்கிருந்த காவலர்கள் மெளனப்பார்வையாளர்களாக நாங்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்தார்கள்” என்று கூறியதை அறிக்கை பதிவு செய்துள்ளது.

“டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!

கலவரங்களில் டெல்லி காவல்துறையின் பங்கு:

கலவரம் முடிந்த பின்னர் டெல்லி காவல்துறையினர் முஸ்லிம் மக்களை கைது செய்து செய்து வழக்குப் பதிவு செய்ததை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆராய்ந்துள்ளதாக கூறுகிறது. குறிப்பாக சிஏஏ-வை எதிர்த்து போராடிய மனித உரிமை செயற்பாட்டாளர் காலித் சைஃபி கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டார்.

அவர் போலிஸ் காவலில் இருந்துவிட்டு சிகிச்சைக்காக மார்ச் மாதம் வெளியே வந்த போது, சக்கர நாற்காலியில் வந்ததையும் மேலும், ஆறு மாதம் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டமான UAPA பிரிவுகளின்கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அவர் காவலின் போது மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டதாகவும், போலி வாக்குமூலம் அளிக்க நிர்பந்திக்கப்பட்டதாகவும், வெற்றுக்காகிதத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்லாது, Human Rights Law Network (HRLN) என்ற அரசு சாரா அமைப்பின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரரை சந்திக்க கூட போலிஸார் அனுமதி மறுத்ததாகவும் கூறியதை மேற்கொள் காட்டியுள்ளது.

“டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!

மேலும், ஜூலை 8ம் தேதி டெல்லி கலவரம் தொடர்பான செயல்பாடுகள் குறித்து ஓர் துறை ரீதியிலான உத்தரவில் இந்துக்கள் உணர்வு புண்படாத வகையில் நடந்துக்கொள்ளுமாறு கூறிய உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தும் அந்த உத்தரவை தற்போது வரை திரும்பப் பெறவில்லை எனவும் அறிக்கை கூறுகிறது.

இறுதியாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், “டெல்லி கலவரம் தொடர்பாக வெளிப்படையான மற்றும் தனிச்சையான விசாரணை நடத்தவேண்டும். வகுப்புவாத பதற்றம் மற்றும் வன்முறை சம்பவங்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு சிறந்த பயிற்சி வழங்க வேண்டும்.

இது தவிர வகுப்புவாத வன்முறை சம்பவங்கள், அவை தொடர்புடைய கைது நடவடிக்கை, தடுப்புக்காவல் நடவடிக்கை, இனம், மதம், பாலினம், அரசியல் பின்புலம் என எந்த பாகுபாடும் பார்க்காமல் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இதேபோல, அனைத்து காவல்துறை தலைமையகங்களிலும் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும்” என அதில் வலியுறுத்தியுள்ளது.

“டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!

மேலும், இதுகுறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் செயல் இயக்குநர் அவினாஷ் குமார் கூறுகையில், “குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு அதிகார மட்டத்தில் கிடைக்கும் பாதுகாப்பால் ஆழமாக மனித உரிமை மீறலைச் செய்ய முடியும்; அதாவது அவர்களால் எதற்காகவும் சட்டத்தை கையில் எடுக்கலாம் என்று உணர்த்துகிறது” எனத் தெரிவித்தார்.

இந்த கலவர சம்பவம் குறித்து காவல்துறை இணை ஆணையாளர் அலோக் குமார் கூறுகையில், “கலவரத்தின் போது காவல்துறையினர் மெளனப் பார்வையாளர்களாக இருந்ததாக கூறும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ஆனால் எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. இதனிடையே அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளதால் இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

banner

Related Stories

Related Stories