இந்தியா

87,000 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா..573 பேர் மரணம்.. தேசிய நிவாரணம் கேட்டு IMA பிரதமர் மோடிக்கு கடிதம்

இந்தியாவில் கொரோனா வைரஸால் 87 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

87,000 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா..573 பேர் மரணம்.. தேசிய நிவாரணம் கேட்டு IMA பிரதமர் மோடிக்கு கடிதம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் சாமானிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என மருத்துவ பணியாளர்களும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

தொடக்கம் முதலே மருத்துவ பணியாளர்களுக்கு என பிரத்யேகமாக உயிர்காக்கும் உடைகள் முறையாக அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் பல மூத்த மருத்துவர்கள், செவிலியர்கள் இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார்கள்.

இதனிடையே அதிக நேர உழைப்பால் மன உளைச்சல் போன்ற மருத்துவ உபாதைகளுக்கும் மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றை களையக் கோரி அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.

87,000 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா..573 பேர் மரணம்.. தேசிய நிவாரணம் கேட்டு IMA பிரதமர் மோடிக்கு கடிதம்

இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.

அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுகளால் 87 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 573 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு தேசிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளார்.

banner

Related Stories

Related Stories