இந்தியா

இந்துப் பெண் முஸ்லிம் வீட்டில் தங்கியதுபோல காட்டியதால் டி.வி நிகழ்ச்சியை 2 மாதங்கள் முடக்கிய அசாம் அரசு!

அசாமில் உள்ள தொலைக்காட்சியில் வெளியான தொடருக்கு இந்துத்வா கும்பல் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

அசாமில் ரெங்கோனி என்ற பிரபல தனியார் தொலைக்காட்சி, ‘பேகம் ஜான்’ (Begum Jaan) என்ற தொடரை மூன்று மாதமாக ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில், இந்த தொடரில் இந்துப் பெண் ஒருவர் முஸ்லிம் வீட்டில் தங்கியதுபோலவும், முஸ்லிம் ஆணின் உதவியுடன் சமூகத்திற்கு எதிராக அந்த பெண் போராடும் பயணத்தை மையமாக வைத்து கதை நகர்ந்துள்ளது.

இந்த தொடரைப் பார்த்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் தொடர்புடைய இயக்கமான இந்து ஜாக்ரன் மன்ச் மற்றும் இந்துத்வா கும்பல்கள் ரெங்கோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பேகம் ஜான்’ தொடர், இந்து சமுதாய நெறிமுறைகளை சரியான அர்த்தத்தில் சித்தரிக்கவில்லை; ஏற்கனவே உள்ள லவ் ஜிஹாத்தை இந்த தொடர் மேலும் ஊக்கப்படுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், டி.வி தொடரை இயக்கிய இயக்குனர், நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கவேண்டும் எனக் கூறி பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து குவஹாத்தி காவல் ஆணையர் இதுதொடர்பாக விசாரணை குழுவை நியமித்து விசாரணை நடத்தினார்.

இந்துப் பெண் முஸ்லிம் வீட்டில் தங்கியதுபோல காட்டியதால் டி.வி நிகழ்ச்சியை 2 மாதங்கள் முடக்கிய அசாம் அரசு!

விசாரணை முடிவில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால், ‘பேகம் ஜான்’ தொடரை இரண்டு மாதங்களுக்கு தடை செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து இதுகுறித்து பேசிய ரெங்கோனி தொலைக்காட்சி நிர்வாகி, “‘பேகம் ஜான்’ தொடர் மனித நேயத்தை மட்டும் தான் ஊக்குவிக்கிறது.

இதில் லவ் ஜிஹாத் உள்ளதாக கூறுவது பொய். முஸ்லிம் பகுதியில் சிக்கலில் சிக்கியுள்ள இந்து பெண்ணை, முஸ்லிம் ஆண் காப்பாற்றுவதை பற்றியது இத்தொடர். இந்த தொடரில் எந்த மதத்தை இழிவுப்படுத்தவில்லை” என்றார்.

மேலும் இந்த தொடரில் நடித்த நடிகை பிரீத்தி கொங்கோனா தன் மீது இந்துத்வா கும்பல்கள் இணைய வழி தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடார்பாக நடிகை பிரீத்தி கொங்கோனா கூறுகையில், “தொடர் வெளியானதில் இருந்தே, தனக்கும் தன் குடுபத்திற்கு பல்வேறு மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளது.

இந்துப் பெண் முஸ்லிம் வீட்டில் தங்கியதுபோல காட்டியதால் டி.வி நிகழ்ச்சியை 2 மாதங்கள் முடக்கிய அசாம் அரசு!

குறிப்பாக, இந்துத்வா கும்பல்கள் சமூக ஊரடங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை வன்கொடுமை செய்துவருகிறார். நேரடியாக பலாத்கார மிரட்டளும் வருகிறது. ஆனால் இதுபற்றி காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஒரு டி.வி தொடரில் வெளியாகும் கதையை வைத்து அசாமில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பல்கள் மதம் ரீதியாக பிரிவினைவாத அரசியல் செய்வதாக அம்மாநிலத்தில் உள்ள ஜனநாயக அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories