இந்தியா

சினிமா படப்பிடிப்புக்கான வழிகாட்டு செயல்முறைகளை வெளியிட்ட மத்திய அரசு : இன்னும் கண்டுகொள்ளாத மாநில அரசு!

பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சினிமா துறையின் இயக்கம் மார்ச் மாதம் முதல் முடங்கியுள்ளது. ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

சினிமா படப்பிடிப்புக்கான வழிகாட்டு செயல்முறைகளை வெளியிட்ட மத்திய அரசு : இன்னும் கண்டுகொள்ளாத மாநில அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவற்றை தொடங்கும்போது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முகக் கவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது போன்ற பல பாதுகாப்பு வழிமுறைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்த வழிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வெளியிட்டுள்ளார். இந்த பாதுகாப்பு விதிமுறைகள் இத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொது வழிகாட்டு செயல்முறைகள் சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சகங்களைக் கலந்தாலோசிக்கப்பட்ட பின்பே இறுதி செய்யப்பட்டதாக ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பொது வழிகாட்டு செயல்முறைகளில் கேமராவுக்கு முன்னால் இருப்பவர்களைத் தவிர அனைவரும் முகக்கவசம் அணிவது, படிப்பில் பணிபுரியும் அனைவரும் 6 அடி தூர சமூக விலகலை கடைப்பிடிப்பது. முடிந்த அளவு உடல் ரீதியான தொடர்பைத் தவிர்ப்பது, முடிந்த அளவு உபகரணங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது, பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது எனப் பல செயல்முறைகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் சிகை அலங்காரக் கலைஞர்கள், ஒப்பனை கலைஞர்கள் பாதுகாப்பு உடைகளை அணியவேண்டும் எனவும் அந்த செயல்முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது எனத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜவடேகர் இந்த வழிகாட்டு செயல்முறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இத்துறையின் இயக்கம் மார்ச் மாதம் முதல் முடங்கியுள்ளது. ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் மத்திய அரசு இந்த வழிகாட்டி செயல்முறைகளை வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இது குறித்து எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories