இந்தியா

செப்.,10ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்? NEP, EIA 2020-ஐ சட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடும் மோடி அரசு!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

செப்.,10ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்? NEP, EIA 2020-ஐ சட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை இறுதியில் கூட்டப்பட வேண்டிய மழைக்கால கூட்டத் தொடர் இதுவரையில் கூட்டப்படவில்லை.

ஆறு மாதத்துக்கு ஒரு முறை நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற விதிமுறை செப்டம்பர் 22 ஆம் தேதியோடு முடிவடைகிறது. எனவே, செப்டம்பர் 10 ஆம் தேதி நாடாமன்றத்தைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

செப்.,10ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்? NEP, EIA 2020-ஐ சட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடும் மோடி அரசு!

குறுகிய காலம் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டத் தொடரில் ஊரடங்கு காலத்தில் கொண்டுவரப்பட்ட பல அவசர சட்டங்களுக்கு மாற்று சட்டம் கோண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு, வேலை இழப்பு, பொருளாதார வீழ்ச்சி, சீன ஊடுருவல், ஃபேஸ்புக் விவகாரம் ஆகிய முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகளும் தயாராகி வருகிறது.

இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு வர இயலாத எம்.பி.கள் தங்களுடைய ஊரிலிருந்தே காணொலிக்காட்சி மூலம் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்திரி சபாநாயகருக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

banner

Related Stories

Related Stories