இந்தியா

7 மணி நேரமாக பாதாள சாக்கடை அருகில் நின்று மக்களை எச்சரித்த பெண் - தாமதமாக வந்து கண்டித்த அதிகாரிகள்!

பல வருடங்களாக பூ வியாபாரம் செய்யும் கந்தா மூர்த்தியின் வீடு மற்றும் உடைமைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

7 மணி நேரமாக பாதாள சாக்கடை அருகில் நின்று மக்களை எச்சரித்த பெண் - தாமதமாக வந்து கண்டித்த அதிகாரிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையில் கனமழை பெய்து சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக இருப்பதால் சாலைகளில் செல்வோர் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில், மாத்துங்கா பகுதியில் சாலையில் உள்ள பாதாள சாக்கடை திறந்திருந்ததால் அதன் பக்கத்திலேயே பல மணிநேரங்கள் நின்று எச்சரித்து பலரைக் காப்பாற்றியுள்ளார் கந்தா மூர்த்தி கலன் என்ற பெண்மணி.

மும்பையில் பல வருடங்களாக பூ விற்று வியாபாரம் செய்து வருபவர் கந்தா மூர்த்தி கலன். இவருடைய கணவர் பக்கவாதத்தால் பல வருடங்களாகப் படுக்கையில் உள்ளார். இவர்களுக்கு 8 பிள்ளைகள் உள்ளனர்.

அவர்களில் 5 பிள்ளைகளுக்கு மணமாகியுள்ள நிலையில் மீதமுள்ள 3 பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக கந்தாமூர்த்தி உழைத்துவருகிறார்.

இந்நிலையில் மும்பையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிக அளவில் மழை பெய்துள்ளது. சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மும்பை மாத்துங்கா பகுதியில் உள்ள ஒரு சாலையில் வெள்ள நீர் வடிவதற்காக அங்கிருந்த பாதாள சாக்கடையைத் திறந்துள்ளார்.

திறந்த அந்த ஓட்டையில் யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதால் கந்தாமூர்த்தி அந்த பாதாள சாக்கடை துளையின் அருகிலேயே பல மணிநேரமாக நின்று பாதுகாத்துள்ளார். கிட்டத்தட்ட 7 மணிநேரம் அவர் அந்த பாதாள சாக்கடை துளையின் பக்கத்திலேயே நின்று வருவோரை எச்சரித்துள்ளார்.

கந்தா மூர்த்தி அந்த சாக்கடை துளையின் அருகில் பாதுகாப்புக்காக நிற்கும் அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கந்தா மூர்த்தியின் வீடு மற்றும் உடைமைகள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், மிகத் தாமதமாக அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடையைத் திறந்ததற்காக அவரைக் கண்டித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories