இந்தியா

ஜெய் ஸ்ரீராமை கைவிட்ட இந்துத்வ கும்பல்.. மோடி ஜிந்தாபாத் என முழக்கமிடாததால் இஸ்லாமிய முதியவர் தாக்குதல்!

மோடி ஜிந்தாபாத் என முழக்கமிடாததால் இஸ்லாமிய முதியவரை சரமாரியாக இந்துத்வ கும்பல் ஒன்று தாக்கியுள்ளது.

ஜெய் ஸ்ரீராமை கைவிட்ட இந்துத்வ கும்பல்.. மோடி ஜிந்தாபாத் என முழக்கமிடாததால் இஸ்லாமிய முதியவர் தாக்குதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜெய் ஸ்ரீராம் மற்றும் மோடி ஜிந்தாபாத் என முழக்கமிடக் கோரி, ராஜஸ்தானில் இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுநர் மீது மதவாத கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள ஜிகிரிஜோதி என்ற கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 52 வயதான ஆட்டோ ஓட்டுநர் காஃபர் அகமது என்பவர், கச்சாவா என்ற பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி வந்த போது, காரில் இருந்து வந்த இருவர் அவரை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

ஜெய் ஸ்ரீராமை கைவிட்ட இந்துத்வ கும்பல்.. மோடி ஜிந்தாபாத் என முழக்கமிடாததால் இஸ்லாமிய முதியவர் தாக்குதல்!

அதன் பிறகு ஜெய் ஸ்ரீராம் மற்றும் மோடி ஜிந்தாபாத் என முழக்கமிடச் சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு இஸ்லாமிய முதியவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் அவரை சரமாரியாக தாக்கினர்.

மேலும் ஆட்டோவை சேதப்படுத்தியும், காஃபரின் தாடியை பிடித்து இழுத்து பாகிஸ்தானுக்கு சென்றுவிடும்படி மீண்டும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதால் முதியவர் காஃபருக்கு கண்கள் , முகம் மற்றும் பற்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல் நிலையத்தில் காஃபர் புகாரளித்ததன் பேரில் ஷம்பு தயாஸ், ராஜேந்திர ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த காரையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories