இந்தியா

நேபாளி நபருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்தல் : உ.பியில் இந்துத்வ கும்பல் அராஜகம்

உத்தர பிரதேசத்தில் நேபாளத்தைச் சேர்ந்த நபருக்கு இந்துத்வ கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக மொட்டையடித்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா நேபாளம் இடையே இருந்து வந்த நட்புறவு சீன ராணுவத்தின் தாக்குதலுக்கு பிறகு அதிருப்திக்குள்ளாகி வருகிறது. இப்படியான சூழலில், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, “ராமரின் பிறப்பிடமான அயோத்தி இந்தியாவில் இல்லை நேபாளத்தில் தான் உள்ளது. ராமர் இந்தியர் அல்ல, நேபாளி” என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் விஷ்வ இந்து சேனாவைச் சேர்ந்த அருண் பதாக் உள்ள நால்வர் கொண்ட கும்பல் ஒன்று நேபாள நாட்டைச் சேர்ந்த நபரை வழி மறித்து அவரது தலையை மொட்டையடித்து, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லியும், நேபாள பிரதமருக்கு எதிராக முழக்கமிடவும் வற்புறுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் அந்த இந்துத்வ கும்பல் பதிவேற்றியுள்ளது. அந்த வீடியோ வைரலானதால் பெரும் பரபரப்பும், சர்ச்சையும் உருவாகியுள்ளது. மேலும் இந்தியா - நேபாளம் இடையேயான உறவில் உள்ள சிக்கலை பெரிதுபடுத்தும் வகையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வாரணாசி போலிஸ் அதிகாரி அமித் பதாக், நால்வரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories