இந்தியா

“மோடியின் வெற்று பேச்சு இந்தியாவையே பலவீனமாக்கியுள்ளது; வார்த்தை ஜாலங்கள் போதாது” - ராகுல் காந்தி தாக்கு!

அண்டை நாடுகளுடனான நட்புறவை பேணாததாலேயே சீனாவின் தாக்குதலுக்கு அடித்தளமாக உள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவம் கடந்த மாதம் நடத்திய தாக்குதல் உலக அளவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாட்டின் 20 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய ஆட்சியில் உள்ள பாஜக அரசோ, சீனாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

மாறாக, சீன பொருட்களை ஒழிக்கிறோம், சீனாவின் செயலிகளுக்கு தடை விதிக்கிறோம் என குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பிப்பது போல செயல்பட்டு வருகிறது மத்திய பாஜக அரசு. இந்நிலையில், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வீடியோ செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்தியா கடந்த 6 ஆண்டு காலமாக பெரும் கலக்கத்துடனே இருந்து வருகிறது. பல்வேறு சீர்குலைவுகளை சந்தித்து வருகிறது. ஏனெனில், நாட்டில் பொருளாதாரத்தை பாதுகாப்பதில் மத்திய பாஜக அரசு தோல்வியையே சந்தித்துள்ளது. வெளியுறவுக் கொள்கை, அண்டை நாடுகளுடனான நட்புறவு ஆகியவற்றிலும் மோடி அரசு தோல்வியையே கண்டுள்ளது.

“மோடியின் வெற்று பேச்சு இந்தியாவையே பலவீனமாக்கியுள்ளது; வார்த்தை ஜாலங்கள் போதாது” - ராகுல் காந்தி தாக்கு!

இதனை தக்க சமயமாக பயன்படுத்தி இந்தியாவை சீனா அச்சுறுத்தி வருகிறது. என்னதான் உலக நாடுகள் ஆயுதங்களையும், ராணுவத்தையும் கொண்டு தங்கள் நாட்டினை காத்தாலும், அண்டை நாடுகளுடனான நட்புறவே முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சியின் போது, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பியா போன்ற நாடுகளுடன் இந்தியா ராஜாங்க ரீதியிலான நட்புறவை கொண்டிருந்தது. அதன் மூலம் உலக அளவில் இந்தியா பெரும் முன்னிலையை பெற்றது. ஆனால் இப்போது. உலக நாடுகளுடன் வெறும் வர்த்தக ரீதியிலான உறவே இந்தியாவுக்கு உள்ளது.

கடந்த காலங்களில் பாகிஸ்தானை தவிர அனைத்து அண்டை நாடுகளுடனும் இந்திய நட்புறவை பேணி பாதுகாத்து வந்தது. தற்போது இந்தியாவின் மீது நேபாளம் கோபத்தை கக்குகிறது. இன்னபிற அண்டை நாடுகளாக மாலத்தீவு, பூடான் போன்றவையும் அதிருப்தி மனப்பான்மையில் உள்ளது.

உலகளவில் இந்தியாவின் பெருமை ஓங்குவதற்கு நம்முடைய பொருளாதாரம் பெரும் பங்காற்றியது. ஆனால், தற்போது பெரும் மோசமான பொருளாதார நிலையை அடைந்துள்ளோம். இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையாகும். இந்தியாவின் பலமாக இருந்த பொருளாதாரம் தற்போது பலவீனமாகிவிட்டது.

2014ம் ஆண்டு முதல், பிரதமர் மோடியின் தொடர்ச்சியான தவறுகளும், கண்மூடித்தனங்களும் அடிப்படையிலேயே இந்தியாவை பலவீனப்படுத்தியுள்ளது. மேலும் நாட்டு மக்களை பாதிக்கக்கூடியவையாகவும் ஆக்கியுள்ளன.

இது தொடர்பாக அரசிடம் பல்வேறு சமயங்களில் பலமுறை காங்கிரஸ் எடுத்துரைத்துள்ளது. சிறு, குறு தொழில்களை பாதுகாத்து, பொருளாதார முன்னேற்றத்துக்கு ஊக்கமளிக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், மத்திய மோடி அரசு அதனை ஏற்க மறுக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories