இந்தியா

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி - மோடி அரசின் தாமதம் இனியும் தேவைதானா?

பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி - மோடி அரசின் தாமதம் இனியும் தேவைதானா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா தொற்றுக்கு 18,020,684 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 688,913 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை தாண்டியது. நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்ந்துள்ளது. அதேப்போல் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,364 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச அமைச்சர் மகேந்திர சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி - மோடி அரசின் தாமதம் இனியும் தேவைதானா?

இதனிடையே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அவர் தற்போது தனிமைப்பட்டுத்தப்பட்டுள்ளார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் தீவிரம் அடைந்து வரும் கொரோனா பாதிப்பால் நாட்டில் உள்ள முக்கிய அமைச்சர்களுக்கும், ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் என கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது நெருக்கடியின் கடுமை தன்மையை உணர்த்துகிறது. தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மத்திய அரசு தவிர்க்க வேன்டிய அரசியல் நிகழ்வுகளை முன்னெடுக்கிறது என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories