இந்தியா

ஊரடங்கால் வீடுகளில் எளிய முறையில் தொழுகை: சமூக இடைவெளியுடன் நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்!

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொரோனா ஊரடங்கு காரணமாக சமூக இடைவெளி பின்பற்றி வீடுகளில் எளிய முறையில் எவ்வித ஆரவாரமும் இன்றி தொழுகை நடத்தி கொண்டாடப்பட்டது.

ஊரடங்கால் வீடுகளில் எளிய முறையில் தொழுகை: சமூக இடைவெளியுடன் நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவல் அதிகரித்துவருவதன் காரணமாகவும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் வெகு விமர்சையாக கூட்டுதொழுகை குர்பானி என நடத்தப்படும் திருவிழா, வீடுகளில் தனி மனித இடைவெளி கடைபிடித்து குடும்பத்தார் மட்டும் ஒன்று கூடி தொழுகை நடத்தி கொண்டாடினர்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வழக்கமாக பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் குறிப்பாக, இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் ஒன்று கூடி கூட்டு தொழுகை நடத்தி பண்டிகை கொண்டாடப்படும்.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக எளிய முறையில் இஸ்லாமிய மக்கள் தங்களது ஐந்து கடமைகளில் ஒன்றான ஏழைகளுக்கு உதவுதல் என்பதை கடைப்பிடித்து ஆடு, மாடுகளின் இறைச்சி, அரிசி ஆகியவற்றை குருபானி கொடுத்து புத்தாடைகள் அணிந்து வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி கொண்டாடினர்.

ஊரடங்கால் வீடுகளில் எளிய முறையில் தொழுகை: சமூக இடைவெளியுடன் நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்!

மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது வீடு, மொட்டைமாடி, தோட்டம் ஆகிய இடங்களில் குடும்பம் குடும்பமாக பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழந்தனர்.

பக்ரீத் பண்டிகையின் சிறப்புகளில் ஒன்றான குர்பானி எனும் கால்நடைகள் பலியிடும் நிகழ்வு நீதிமன்ற உத்தரவு காரணமாக பொது இடங்களில் செய்யாமல் மாநகராட்சி ஆடு அறுப்பு மையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புடன் செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஆரவாரமாக நடக்கும் பக்ரீத்பண்டிகை இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக அமைதியாக கொண்டாடப்பட்டது.

banner

Related Stories

Related Stories