இந்தியா

ஒரு வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை அறிந்துகொள்ள உதவும் ‘Mausam’ ஆப் - அறிமுகம் செய்தது மத்திய அரசு!

MAUSAM செயலியை இந்தியன் இன்ஸ்டிட்டுயூட் ஆஃப் டிராப்பிக்கல் மெட்ராலஜி என்ற அமைப்பும் (IITM), ICRISAT அமைப்பும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து தயாரித்துள்ளன.

மவுசம் வானிலை மொபைல் ஆப். ( MAUSAM Mobile app for weather)
மவுசம் வானிலை மொபைல் ஆப். ( MAUSAM Mobile app for weather)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வானிலை தகவல்களை உடனுக்குடன் வழங்க மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மவுசம் (Mausam) எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மவுசம் செயலி 200 நகரங்களுக்கான காலநிலை மாற்றம், தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரத்தன்மை, காற்றின் வேகம் மற்றும் திசை உள்ளிட்ட விவரங்களைப் பயனாளர்களுக்குத் தரும்.

இந்த செயலியை வெப்ப மண்டல பயிர் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பும், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிராப்பிக்கல் மெட்ராலஜி என்ற அமைப்பும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து தயாரித்துள்ளன.

ஒரு வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை அறிந்துகொள்ள உதவும் ‘Mausam’ ஆப் - அறிமுகம் செய்தது மத்திய அரசு!

இந்த மவுசம் செயலி கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் உள்ளிட்ட இரண்டிலும் கிடைக்கிறது. மேலும் இந்த செயலி பல வசதிகளையும் தருகிறது.

இந்த வானிலை செயலி 200 நகரங்களுக்கான காலநிலை மாற்றம், தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரத்தன்மை, காற்றின் வேகம் மற்றும் திசை உள்ளிட்ட விவரங்களைப் பயனாளர்களுக்குத் தரும்.

ஒரு வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை அறிந்துகொள்ள உதவும் ‘Mausam’ ஆப் - அறிமுகம் செய்தது மத்திய அரசு!

மேலும் இந்த செயலி 800 நிலையங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான காலநிலை நிலவரத்தையும் வழங்கும். மிகத் தீவிரமான வானிலை இருந்தால் அதற்கான எச்சரிக்கையையும் இந்த மவுசம் ஆப் வழங்கும்.

ஒரு வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை அறிந்துகொள்ள உதவும் ‘Mausam’ ஆப் - அறிமுகம் செய்தது மத்திய அரசு!

அதேபோல் 200 நகரங்களுக்கு வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் திசை உள்ளிட்ட தற்போதைய வானிலை தகவல்கள் ஒரு நாளைக்கு எட்டு முறை புதுப்பிக்கப்படும்.

மேலும், ஆபத்தான வானிலை நிலவும் காலங்களில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய வண்ணங்களில் எச்சரிக்கை தகவல்களையும் இந்த மவுசம் செயலி (MAUSAM APP) வழங்கும்.

banner

Related Stories

Related Stories