இந்தியா

“பப்ஜி விளையாட்டுக்கு ஆப்பு?” - இந்தியாவில் PUBG-க்கு தடைவிதிக்க மத்திய அரசு பரிசீலனை!

இந்தியாவில் ஏற்கெனவே 50க்கும் மேற்பட்ட சீன செயலிகளை அரசு தடை செய்ததைத் தொடர்ந்து, தற்போது பப்ஜி போன்ற 275 சீன செயலிகளை தடை செய்யப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்த மாத தொடக்கத்தில், டிக்டாக், ஹெலோ, யூசி பிரவுசர், ஷேர்இட் உட்பட 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. இந்த செயலிகள் அனைத்தும் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தானவை என்று கூறியே தடைசெய்யப்பட்டன.

இந்நிலையில் பப்ஜி போன்ற கேம்கள் இந்திய அளவில் பல தரப்பட்ட வயதினரால் பெருமளவில் விளையாடப்படுகிறது. அந்த ஆப் மற்றும் லூடோ, ஸியோமியின் 14 MI ஆப்கள், அலி எக்ஸ்பிரஸ், ரெஸோ மற்றும் யூ லைக் போன்ற மற்ற ஆப்களையும் தடை செய்ய மத்திய அரசு பரீசிலித்து வருகிறது.

இந்த சீன செயலிகள் தேசியப் பாதுகாப்பு மற்றும் பயனாளிகளின் தனியுரிமையை (user privacy) மீறுவதாக உள்ளதா என இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் இந்த சீன செயலிகள் மட்டுமல்லாமல், தனியுரிமையை மீறும் மற்ற தயாரிப்பாளர்களின் செயலிகளையும் தடை செய்ய அரசு பரீசிலித்து வருகிறது.

“பப்ஜி விளையாட்டுக்கு ஆப்பு?” - இந்தியாவில் PUBG-க்கு தடைவிதிக்க மத்திய அரசு பரிசீலனை!

ஏற்கெனவே அரசு தடை செய்திருந்த 59 செயலிகளின் தயாரிப்பாளர் நிறுவனங்களுக்குப் பதிலளிக்க அரசு கொடுத்திருந்த கால அவகாசம் தற்போது முடியப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories