இந்தியா

“பா.ஜ.கவின் மோசடிகளை முறியடித்து நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பார்கள்” - ராகுல் காந்தி நம்பிக்கை!

பாஜகவின் மோசடி சதிகளை முறையடித்து நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் மக்கள் கட்டிக்காப்பார்கள் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“பா.ஜ.கவின் மோசடிகளை முறியடித்து நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பார்கள்” - ராகுல் காந்தி நம்பிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்காக அந்த மாநில ஆளுநர் மூலமாக பா.ஜ.க. முயற்சி செய்கிறது.

ராஜஸ்தானில் பா.ஜ.க. நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது.

“பா.ஜ.கவின் மோசடிகளை முறியடித்து நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பார்கள்” - ராகுல் காந்தி நம்பிக்கை!

இதனையடுத்து ஜனநாயகத்துக்காக குரல் கொடுப்போம் (SpeakUpForDemocracy) என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அரசியலமைப்பின் அடிப்படையான மக்களின் குரலால் நாட்டின் ஜனநாயகம் இயங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மோசடி சதியை புறக்கணித்து இந்தியாவின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நாட்டு மக்களும் பாதுகாப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories