இந்தியா

“ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்யவேண்டும்” : நீதிபதி புகழேந்தி வலியுறுத்தல்!

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்வதற்கு மத்திய மாநில அரசு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும் நீதிபதி புகழேந்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் செல்போன்கள் மூலம் ஆன்லைனில் சீட்டு விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பொழுது போக்கிற்காக ஆன்லைனில் சீட்டு விளையாடியது போக, தற்போது பணத்திற்காக விளையாடவும் ஆரம்பித்துள்ளனர். இதனால் பலர் தங்கள் பணத்தை இழந்து நிற்கின்றனர்.

இந்த சூழலில், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் சேர்ந்த சிலுவை என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். அந்த மனுவில், “கொரோனா ஊரடங்கு ஒரு காலத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நானும் என் நண்பர்களும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். என் மீதும் என் நண்பர்கள் மீது கூடங்குளம் போலிஸார் வழக்கு பதிவு செய்து செய்துள்ளனர்.

பொது இடத்தில் நடைபாதையில் சீட்டு விளையாடினால் தான் குற்றம் எனவே மறுபதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

“ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்யவேண்டும்” : நீதிபதி புகழேந்தி வலியுறுத்தல்!

அப்போது நீதிபதி புகழேந்தி பிறப்பித்த கூறுகையில், “தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்தது. இதன் மூலம் பல்வேறு தற்கொலைகள் மற்றும் அந்த குடும்பத்தின் உடைய வறுமையை போக்கபட்டு உள்ளது. ஆனால் தற்பொழுது ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி சீட்டு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் பணத்தை மையமாக வைத்து நடைபெறுகிறது. பணம் சூறையாடப்பட்கிறது.

இது குறிப்பாக வேலையில்லா இளைஞர்களின் நேரத்தையும், அவர்களுடைய சிந்திக்கும் திறனையும் இது கெடுக்கிறது. இது சமுதாயத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே தமிழக அரசு , மத்தி அரசு இது போன்ற ஆன்லைன் உள்ளிட்ட சீட்டு விளையாட்டுகளை தடை செய்வதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்பது நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது. என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

“ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்யவேண்டும்” : நீதிபதி புகழேந்தி வலியுறுத்தல்!

மேலும் தற்போது இணைய தளத்தில் வேலை இல்லா இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடுவது அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

2003 ம் ஆண்டு தமிழகத்தில் லாற்றி சீட்டுகள் தடை செய்யப்பட்டது. இந்திய முழுவதும் online rummy விளையாட்டு தடை மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories