இந்தியா

“தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை கையாண்ட பா.ஜ.க ஐ.டி விங்” : தேர்தலில் பா.ஜ.கவின் தில்லுமுல்லு அம்பலம்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை பா.ஜ.கவின் ஐ.டி விங் கையாண்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை கையாண்ட பா.ஜ.க ஐ.டி விங்” : தேர்தலில் பா.ஜ.கவின் தில்லுமுல்லு அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சியினர் முன்வைத்தனர்.

குறிப்பாக பல ஆண்டுகளாக நேர்மையுடன் கடைபிடிக்கப்பட்டுவந்த விதிமுறைகளை ஆளும் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக விதிமுறையில் தளர்வுகளை ஏற்படுத்திக் கொடுத்ததகவும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி பிரச்சனையை மூடிமறைக்கும் வேலையை தேர்தல் ஆணையம் செய்வதாக கூறப்பட்டது.

அதுமட்டுமல்லாது பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் தேர்தல் ஆணையம் மறைமுக உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க மற்றும் சிவசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இந்த கூட்டணியில் இருந்த பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இருப்பதால் முதல்வர் பதவி கேட்டது.

“தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை கையாண்ட பா.ஜ.க ஐ.டி விங்” : தேர்தலில் பா.ஜ.கவின் தில்லுமுல்லு அம்பலம்!

இதனால் இழுபறியான நிலையில், பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனையடுத்து சிவசேனா தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.

முன்னதாக மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின் போது, தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை பா.ஜ.கவின் ஐ.டி விங் கையாண்டது தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான தகவலை, சாகேத் கோகலே என்ற சமூக ஆர்வலர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதில் அவர், அதிர்ச்சி விவரங்கள் கிடைத்துள்ளது என குறிப்பிட்டு, 2019ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக தங்கள் சமூக ஊடகங்கள் பணிக்காக பா.ஜ.க ஐ.டி விங்கை இந்திய தேர்தல் ஆணையம் பணியமர்த்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை கையாண்ட பா.ஜ.க ஐ.டி விங்” : தேர்தலில் பா.ஜ.கவின் தில்லுமுல்லு அம்பலம்!

மேலும், மகாராஷ்டிரா தலைமைத் தேர்தல் ஆணையர் சார்பில் வெளியிட்டப்பட்ட சமூக வலைதள விளம்பரங்களில் ‘202, பிரஸ்மேன் அவுஸ், விலே பார்லே, மும்பை’ ("202 Pressman House, Vile Parle, Mumbai") என்ற முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த முகவரி குறித்து ஆய்வு செய்த போது, இந்த முகவரி ‘சைன்போஸ்ட் இந்தியா’ ( Signpost India) என்னும் விளம்பர நிறுவனம் என்றும் இது அப்போதைய பா.ஜ.க அரசின் ஆதரவின் கீழ் செயல்படும் நிறுவனம் எனவும் தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, இந்த நிறுவனம் ‘சோசியல் சென்ட்ரல்’ ("Social Central") என்னும் இணையதள ஏஜென்சியாக செயல்பட்டுப்பட்டுவந்ததாகவும், இதன் உரிமையாளர் பா.ஜ.க ஐ.டி. விங்-கின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தேவாங்க் தவே என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த, பா.ஜ.க ஐ.டி. விங்-கின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தேவாங்க் தவே தான் அரசு அமைப்புகள், பா.ஜக மற்றும் மகாராஷ்டிர மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், தி ஃபியர்லெஸ் இந்தியன், ஐ சப்போர்ட் மோடி போன்ற இணையப் பக்கங்களையும் இவர் நடத்திவந்துள்ளார்.

இவரின் நிறுவன வாடிக்கையாளர்களின் பட்டியலில், பா.ஜ.க, தேர்தல் ஆணையம் மற்றும் இன்னும் பல அரசு நிறுவனங்களும் இருந்துள்ளது. இந்த தகவலை வெளியிட்ட சாகேத் கோகலே கூறுகையில், “தேர்தல் நடைபெறும் நேரங்களில் கட்சிகளின் ஐ.டி விங் மற்றும் அதன் செயல்பாடுகளை கவனிக்கவேண்டிய தேர்தல் ஆணையமே, ஆளும் கட்சியினரின் ஐ.டி குழுவோடு இணைந்து செயல்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை கையாண்ட பா.ஜ.க ஐ.டி விங்” : தேர்தலில் பா.ஜ.கவின் தில்லுமுல்லு அம்பலம்!

இந்தியத் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் குழுவுடன் இணைந்து மகாராஷ்டிர தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என ஏன் முடிவு எடுத்தது?

இது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் - நடுநிலைமை விதிமுறைகளுடன் ஒத்துப்போகுமா?

பா.ஜ.கவின் குழுக்களோடு இன்னும் தொடர்பு உள்ளதா?

இதற்கான பதிலை இந்திய தேர்தல் அணையம் அவசியமாக தெரிவிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீது இத்தகைய நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories