இந்தியா

“பொருளாதார வளர்ச்சி மைனஸ் 6 முதல் மைனஸ் 9 சதவீதம் வரை வீழ்ச்சியடையும்” - சுப்பிரமணியன் சுவாமி கணிப்பு!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் மைனஸ் 6 முதல் 9 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என பாஜ.க மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

“பொருளாதார வளர்ச்சி மைனஸ் 6 முதல் மைனஸ் 9 சதவீதம் வரை வீழ்ச்சியடையும்” - சுப்பிரமணியன் சுவாமி கணிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் மைனஸ் 6 முதல் 9 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என பாஜ.க மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

காணொளிக் காட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியும். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 6 முதல் மைனஸ் 9 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறேன்.

நம்மிடம் உற்பத்தி செய்வதற்கான அனைத்து வளங்களும், திறனும் இருக்கிறது. உற்பத்தி செய்வதிலும், விற்பதிலும் தான் பிரச்னையாக உள்ளது. தேவையான அளவு தொழிலாளர்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்தும் நடந்தால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7% வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.

சரியான பொருளாதாரக் கொள்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாகப் பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றக்கூடாது. பொருளதாாரம் கடந்த 5 ஆண்டுகளாகவே சீர்குலைவை நோக்கிச் செல்கிறது என எச்சரித்து பிரதமர் மோடிக்கு பல தருணங்களில் நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories