இந்தியா

“N95 மாஸ்க் பயன்படுத்துவதால் பலன் இல்லை” : மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை புதிய அறிவிப்பு!

N95 மாஸ்க் பயன்படுத்துவதால் பலன் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

 “N95 மாஸ்க் பயன்படுத்துவதால் பலன் இல்லை” :  மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை புதிய அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது.கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள மாஸ்க், சானிடைசரை மக்கள் அதிகம் பயன்படுத்திவருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, வால்வ் பொருத்தப்பட்டுள்ள N95 முக கவசத்தை பொதுமக்கள் பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதனைப் பொது மக்கள் பயன்படுத்துவதை தவிற்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

 “N95 மாஸ்க் பயன்படுத்துவதால் பலன் இல்லை” :  மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை புதிய அறிவிப்பு!

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் இந்த N95 வகை மாஸ்க் மூலம் கொரோனா பரவுவதை முற்றிலும் தடுக்க இயலாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, பருத்தி துணி மூலம் தயாரிக்கப்பட்ட முக கவசத்தைப் பொதுமக்கள் பயன்படுத்துவதுதான் சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறையில் இந்த அறிவிப்பு N95 முக கவசத்தை பயன்படுத்தி வந்தோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை நெருங்கும் பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை முறையான ஆய்வுகள் மேற்கொண்டு மக்களை பாதுகாக்கவேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories