இந்தியா

“கலைஞர் பெயரில் சிறப்பான திட்டம்:தி.மு.க தொண்டர்கள் மனதில் இடம்பெற்ற நாராயணசாமி!”-மு.க.ஸ்டாலின் பாராட்டு!

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான இந்தத் திட்டத்திற்கு புதுச்சேரி மக்களும், அரசியல் கட்சியினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“கலைஞர் பெயரில் சிறப்பான திட்டம்:தி.மு.க தொண்டர்கள் மனதில் இடம்பெற்ற நாராயணசாமி!”-மு.க.ஸ்டாலின் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுச்சேரியில் 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி. அதில் பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்பையும் வெளியிட்டார்.

புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டத்தை அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி. நவம்பர் 15 ஆம் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவங்கும் எனவும் தெரிவித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான இந்தத் திட்டத்திற்கு புதுச்சேரி மக்களும், அரசியல் கட்சியினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “ 'புதுவையின் புரட்சி முதல்வர்' நாராயணசாமி அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் பள்ளி மாணவர்க்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

கலைத் தொண்டு மூலமாக 'கலைஞர் கழகம்' வளர்த்த மாநிலத்தில் அவர் பெயரால் ஒரு திட்டம் தொடங்கி இருப்பது பெருமகிழ்ச்சிக்குரியது.

தனது செயலின் மூலம் கோடானுகோடி தி.மு.கழக தொண்டர்கள் மனதில் இடம்பெற்றுவிட்டார் முதல்வர் நாராயணசாமி! வாழ்க அவர் புகழ்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories