இந்தியா

கொரோனா சமூக பரலை எட்டியதாக மருத்துவர் சங்க தலைவர் கருத்து - என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலை எட்டியுள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் வி.கோ.மோங்கோ தெரிவித்துள்ளார்.

கொரோனா சமூக பரலை எட்டியதாக மருத்துவர் சங்க தலைவர் கருத்து - என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 14,426,150 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 604,917 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3,833,271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 142,877 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 543 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,816 ஆக அதிகரித்துள்ளது.

அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,77,618 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் 1 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலை எட்டியுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா சமூக பரலை எட்டியதாக மருத்துவர் சங்க தலைவர் கருத்து - என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?

இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் வி.கோ.மோங்கோ கூறுகையில், “கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டுகிறது. இதுவும் மோசமான நிலையை எட்டியுள்ளதேக் காட்டுகிறது.

முன்பு நகரங்களில் பரவிய கொரோனா தொற்று தற்போது கிராமங்களில் அதிகம் பரவுவதன் மூலம் இந்தியாவில் கொரோனா சமூக பரவல் என்ற நிலையை அடைந்துள்ளதாக தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தப்போது மத்திய பா.ஜ.க அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதாகவும், சமூக பரவல் இல்லை என கூறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories