இந்தியா

“ஊரடங்கை மீறிய பா.ஜ.க அமைச்சரின் மகனை கண்டித்ததால் இடமாற்றம்” : விரக்தியில் ராஜினாமா செய்த பெண் காவலர்!

குஜராத் சுகாதாரத்துறை அமைச்சரின் மகனை ஊரடங்கின் போது தடுத்து நிறுத்திய பெண் காவலர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“ஊரடங்கை மீறிய பா.ஜ.க அமைச்சரின் மகனை கண்டித்ததால் இடமாற்றம்” : விரக்தியில் ராஜினாமா செய்த பெண் காவலர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு வித்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கை மீறும் மக்கள் மீது போலிஸார் வாகன பறிமுதல் செய்வது வழக்குப் போடுவது என கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால் அரசின் உத்தரவுகளை மதித்து மக்கள் என வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனால் அரசின் உத்தரவுகளை ஆளும் பா.ஜ.க அரசின் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் என யாரும் மத்திப்பதே கிடையாது என குற்றச்சாட்டு பரபலாக எழுந்துள்ளது.

இதனிடையே, குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இரவு நேரத்தில் குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானி மற்றும் நண்பர்கர் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்துள்ளனர்.

அப்போது ரோந்து பணியில் இருந்த சூரத் நகர் பெண் காவலர் சுனிதா அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளார். தான் அமைச்சரின் மகன்; தன்னையும் தனது நண்பர்களையும் விட்டும்படி பெண் காவலருடன் அமைச்சரின் மகன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளான்.

அப்போது, “கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன். இந்த இடத்திற்கு மோடியே வந்தாளும் தடுத்து நிறுத்தும் அதிகாரம் உள்ளது’ என கடுமையாக கண்டித்துள்ளார்.

அதன் பின்னர் அமைச்சரின் மகனும் பதிலுக்கு காவலரை எச்சரிக்க, காவலர் உரிய பதிலை அளித்துள்ளார். இதனையடுத்து அமைச்சரின் வலியுறுத்தலின் படி நேர்மையாக பணியாற்றிய காவலர் சுனிதா அம்மாநில காவல் தலைமையக பணிக்கு மாற்றப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த காவலர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories