இந்தியா

ரவுடி என்கவுண்டர் : உ.பி., போலிஸின் பொய்யை அம்பலப்படுத்திய ம.பி., போலிஸ்!

ரவுடி என்கவுண்டரில் உ.பி., போலிஸாரின் வாக்கு மூலம் உண்மைக்கு மாறாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ரவுடி என்கவுண்டர் : உ.பி., போலிஸின் பொய்யை அம்பலப்படுத்திய ம.பி., போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உத்தரபிரதேசத்தில் 8 போலிஸைக் கொன்ற ரவுடி விகாஸ் துபே கடந்த வாரம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மத்திய பிரதேச போலிஸாரால் பிடிக்கப்பட்ட துபே, உத்தர பிரதேச போலிஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.

துபேவை கான்பூர் அழைத்துச் செல்லும் வழியில், கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது தங்களிடம் இருந்து துப்பாக்கியை பறித்து சுட்டு தப்பிக்க முயன்றாதகவும், அதனால் சுட்டுக் கொன்றதாகவும் உ.பி காவல்துறை தெரிவித்தது.

துபேவுக்கு பின் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் போலிஸாரை காப்பாற்றவே யோகி ஆதித்யநாத் அரசு இந்த என்கவுண்டரை செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச போலிஸார் கூறும் தகவல்கள் சிலவற்றை மத்திய பிரதேச போலிஸார் மறுத்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துபேவை கைது செய்த போலிஸார் அவரை முதலி உஜ்ஜெய்ன் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அப்போது அவர் தப்பிக்க முயற்சி செய்ததாகவும் உத்தர பிரதேச போலிஸார் தெரிவித்துள்ளனர். இதனாலேயே தங்களிடம் இருந்து தப்ப முயன்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உ.பி., காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதை அப்படியே மறுக்கிறது மத்திய பிரதேச காவல் துறை. துபேவை காவல் நிலையத்துக்கே அழைத்துச் செல்லவில்லை என்றும், நேரடியாக உத்தர பிரதேச போலிஸிடம் தான் ஒப்படைத்தோம் என்றும், தப்பி ஓட துபே முயற்சிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

போலிஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு தைரியம் கொடுத்த முக்கியப் புள்ளிகளை காக்கவே இந்த நாடகமா என்ற சந்தேகம் ஒவ்வொரு கட்டமாக வலுத்து வருகிறது.

banner

Related Stories

Related Stories