இந்தியா

“சீனா விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்கிறார் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி தாக்கு!

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி எம்.பி, எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்லி, நாட்டை ஏமாற்றி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

“சீனா விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்கிறார் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தங்களது கட்சியின் மக்களவை எம்.பி.க்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக இன்று உரையாடினார்.

இந்த ஆலோசனைக் காட்டத்தில், கொரோனா பரவலைத் தடுக்க மத்திய எடுத்துவரும் நடவடிக்கைகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்லைப் பிரச்சினை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி எம்.பி, எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்லி, நாட்டை ஏமாற்றி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி பேசுகையில், “சீனாவுடனான மோதலை அரசியலாக்கக்கூடாது எனக்கூறி, பிரதமர் பொய் சொல்லி வருகிறார். நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது. தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

எல்லைகளை பலவீனப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்ற காங்கிரசின் நிலையில் உறுதியாக உள்ளோம். நமது நட்பு நாடுகளும் பா.ஜ.க ஆட்சியில் நமக்கு எதிராகத் திரும்பி வருகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசிடம் உதவி கோருகின்றன. ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை” எனப் பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories