இந்தியா

“மோடி அரசின் தோல்விகளே ஹார்வர்டு வர்த்தக பள்ளியின் எதிர்கால ஆய்வு” - பட்டியலிட்ட ராகுல் காந்தி!

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி திட்ட தோல்விகள், கொரோனாவை கையாளும் விதம் ஆகியவை ஹார்வர்டு வர்த்தக பள்ளியின் எதிர்கால ஆய்வுகளாக இருக்கும் என மத்திய மோடி அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பது, சீன ஊடுறுவல், பொருளாதார நெருக்கடி போன்றவை தொடர்பாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்தும், சாடியும் வருகிறார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி.

அந்த வகையில், கொரோனா பரவல் மற்றும் அதன் நெருக்கடிகள் குறித்து நாட்டு மக்களுக்கு மார்ச் மாதம் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் ஒரு பகுதியை குறிப்பிட்டு தனது ட்விட்டரில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அதில், மகாராபாரத போர் வெற்றியடைய 18 நாட்கள் ஆனது என்றும் கொரோனாவை வெல்ல 21 நாட்கள் என்றும் பிரதமர் மோடி பேசியதை குறிப்பிட்டு, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது குறித்த வரைபடத்தையும் ராகுல் காந்தி இணைத்து பதிவிட்டுள்ளார்.

மேலும், ஹார்வர்டு வர்த்தக பள்ளியின் எதிர்கால ஆய்வுகள் கோவிட் 19, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றை முன்னிறுத்தியே இருக்கும் என ட்வீட் செய்து மோடி அரசை நாசூக்காக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி, உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியதை அடுத்து ராகுல் காந்தி இவ்வாறு சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories